‘பானிபூரி’ மாணவன் தமிழில் சாதனை!

‘பானிபூரி’ மாணவன் தமிழில் சாதனை!

Share it if you like it

உ.பியை பூர்விகமாக கொண்ட பத்தாம் வகுப்பு மாணவன் தமிழ் பாடத்தில் சாதனை படைத்து இருக்கிறான். அதேவேளையில், தமிழை தாய் மொழியாக கொண்ட 47,000 மாணவர்கள் தமிழ் தேர்வில் தோல்வியை தழுவி இருக்கின்றனர்

தமிழகத்தில் ஹிந்தி மொழியை அனுமதிக்க மாட்டோம், தமிழ் ஆங்கிலம் தவிர பிற மொழிகளுக்கு அனுமதி கிடையாது. இதுதான், திராவிட மாடல் ஆட்சி என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மேடை தோறும் கூறி வருகின்றார். அதேகருத்தினை, தி.மு.க மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசியல் வாரிசுகள் தொடர்ந்து மேடை தோறும் கூறி வருகின்றனர். அதனை மெய்ப்பிக்கும் வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை பாரதியார் பல்கலை பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பொன்முடி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, பேசிய அமைச்சர் பொன்முடி, நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை. எந்த ஒரு மொழிக்கும் எதிராக நாங்கள் இல்லை. இந்தி படிக்க விரும்பினால் அதை வெளியே சென்று படிக்கலாம். இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். இந்தி படித்தவர்கள்தான் தமிழ்நாட்டில் பானி பூரி விற்கிறார்கள் என்று சர்ச்சைக்குறிய வகையில் பேசி இருந்தார்.

தி.மு.க அமைச்சர் பொன்முடியின் கருத்திற்கு ஹிந்தியை தாய் மொழியாக கொண்டவர்களும் வடமாநிலத்தை சேர்ந்த பிரபலங்களும் தங்களது கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருந்தனர். அந்தவகையில், பிரபல ஹிந்தி பாடகர் குமார் விஷ்வாஸ், தமிழ் மிகவும் வளமான மற்றும் வளர்ந்த மொழி. அத்தகைய மொழிக்குடும்பத்தில் நாங்களும் நீங்களும் அங்கம் வகிப்பதில் நீங்கள் பெருமை கொள்ள வேண்டும். எங்கள் பகுதிகளில் இட்லி தோசை செய்யும் தென்னக சகோதரர்களை அன்போடும், மரியாதையோடும் “அண்ணா” என்று அழைக்கிறோம் என்று பொன்முடிக்கு பதிலடி கொடுத்து இருந்தார்.

இப்படிபட்ட சூழலில் தான், கடந்த மே மாதம் 10 மற்றும் 12 வகுப்பு மாணவ – மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. அந்தவகையில், 10 மற்றும் 12 வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த (20.6.2022) வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தான், கோவை அரசு பள்ளியில் பயின்று வரும் உ.பி. மாநிலத்தை பூர்விகமாக கொண்ட பத்தாம் வகுப்பு மாணவன் ரிஷப் குமார் பொதுதேர்வில் 500-க்கு 461 மதிப்பெண்களை பெற்று இருக்கிறார். அதேவேளையில், தமிழ் தேர்வில் 87 மதிப்பெண்களை பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறான். ஆனால், தமிழை தாய் மொழியாக கொண்டுள்ள 47,000 மாணவர்கள் தமிழ் தேர்வில் தோல்வியை தழுவி இருக்கின்றனர் என்பது தான் துயர சம்பவம்.

ஹிந்தி மொழிக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறேன் என்ற பெயரில் தி.மு.க அரசு தமிழ் மொழியை மெல்ல மெல்ல அழித்து வருகிறது என்பதற்கு 47,000 மாணவ, மாணவிகளின் தோல்வியே சிறந்த சான்று. மேலும், விவரங்களுக்கு இதுகுறித்து செய்தி வெளியிட்ட புதிய தலைமுறையின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் தமிழர்கள் அமைதியுடனும், சகோதரத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், பொன்முடியை போன்ற நபர்கள் மொழி உணர்வை தூண்டி பிரிவினையை வளர்த்தால் வட இந்தியர்கள் வெகு விரைவில் ‘ஏ இட்லி பையா, ‘ஏ தோசை பையா என்று நம்மை அழைப்பார்கள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it