வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டாம் என தமிழக அரசு உதவி எண்ணை அறிவித்துள்ளது. இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினை நெட்டிசன்கள் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில், ஹிந்தி மொழிக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்த ஒரே கட்சி தி.மு.க. அந்த வகையில், எதிர்க்கட்சியாக இருந்த போது ”ஹிந்தி தெரியாது போடா” என்ற வாசகம் கொண்ட டீ சர்ட்டை அணிந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் போஸ் கொடுத்தார். இதனை தொடர்ந்து, தி.மு.க.வை சேர்ந்த மூத்த தலைவர்கள் ஹிந்தி படித்தால் ’பானி பூரி’ தான் விற்க வேண்டும் என ஹிந்தி மொழிக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தனர்.
இப்படிப்பட்ட சூழலில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதையடுத்து, வடமாநில தொழிலாளர்கள் பலர் தாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்த உண்ணம் உள்ளன. இப்படிப்பட்ட சூழலில் தான், ”தமிழ்நாடு அனைவருக்குமான மாநிலம்” என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.