வடமாநில தொழிலாளர்கள் அவதூறு பரப்பும் நோக்கில் கருத்து தெரிவித்த யூ டியூப் பிரபலங்கள் மீது தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்குமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வட இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில், ஜவுளி, கட்டுமானம், உற்பத்தி மற்றும் சேவைகள் போன்ற பல்வேறு துறைகளில் இவர்களது பங்களிப்பு உண்டு. இந்த நிலையில், சில யூடியூப் சேனல்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பற்றி தவறான மற்றும் வெறுப்பூட்டும் கருத்துக்களை பரப்பி வருகின்றனர். இதனால், அவர்கள் தமிழகத்தை விட்டே வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வடமாநில தொழிலாளர்களை படையெடுப்பாளர்கள்’, ‘ஒட்டுண்ணிகள்’, ‘தமிழர்களிடமிருந்து வேலைகளை பறிக்கும் குற்றவாளிகள்’ என்று சில யூ டியூப் ஊடகங்கள் பேசி வருகின்றன. இதுபோன்ற ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.