திராவிட மாடல் சரக்கு… நடுரோட்டில் உருண்ட உடன்பிறப்பு!

திராவிட மாடல் சரக்கு… நடுரோட்டில் உருண்ட உடன்பிறப்பு!

Share it if you like it

மதுபோதையில் டாஸ்மாக் பிரியர் சாலையில் படுத்து கிடந்த காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு உண்டு என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறினார். இதையடுத்து, தி.மு.க.வின் பட்டத்து இளவரசர் உதயநிதி ஸ்டாலின், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி உள்ளிட்டவர்கள் இதே கருத்தை முன்மொழிந்தனர். இதையடுத்து, தமிழகத்தில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த வகையில், தமிழக முதல்வராக ஸ்டாலின் இருந்து வருகிறார். இந்த, அரசு அமைந்து இரண்டு வருடங்களை பூர்த்தி செய்ய உள்ளது. எனினும், மக்கள் விரும்பும் அரசாக விடியல் ஆட்சி இல்லை என்பதே நிதர்சனம்.

இப்படிப்பட்ட சூழலில், தமிழக பா.ஜ.க. மூத்த தலைவராக இருப்பவர் நடிகை குஷ்பு. இவர், தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதாவது, அரசுக்கு வரி செலுத்தும் டாஸ்மாக் பிரியர் ஒருவர் நடுரோட்டில் படுத்துக் கொண்டு சாலையில் அலப்பறை செய்த காணொளியை தான் அவர் வெளியிட்டு இருக்கிறார்.


Share it if you like it