நெல்லை மேயரை மாற்ற கோரி தி.மு.க. கவுன்சிலர்கள் திடீர் போர் கொடி உயர்த்தி இருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வார்டுகள் உள்ளன. இதில், 42 வார்டில் தி.மு.க. வெற்றி பெற்றது. அந்த வகையில், நெல்லை மேயராக சரவணன், துணை மேயராக கே.ஆர். ராஜீ தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில், மேயர் மீது தி.மு.க. கவுன்சிலர்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். திட்டங்களை செயல்படுத்துவதில் முறைகேடு, பணம் கையாடல் என பல்வேறு புகார் அவர் மீது கூறப்பட்டன.
இந்த நிலையில், நெல்லை மேயரை மாற்ற வேண்டும் என நகர்ப்புற உள்ளாட்சிதுறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் தி.மு.க. தலைமையிடம் கவுன்சிலர்கள் முறையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் கே.என்.நேரு மற்றும் திருச்சி சிவா எம்.பி இடையே ஏற்பட்ட மோதல் அடங்குவதற்குள் நெல்லை சம்பவம் தி.மு.க.வில் பெரும் புயலை கிளப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.