விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு தி.மு.க.வை மிக கடுமையாக சாடியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி விடுதலைச் சிறுத்தைகள். இக்கட்சியின், துணை பொதுசெயலாளராக இருப்பவர் வன்னியரசு. இவருக்கும், தி.மு.க.விற்கும் ஏழாம் பொருத்தம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு, தி.மு.க.வை மிக கடுமையாக இவர் சாடி வருகிறார். அந்தவகையில், முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையை இவ்வாறு விமர்சனம் செய்து இருந்தார் : விடுதலைச்சிறுத்தைகள் கொடி எங்கெங்கெங்கு ஏற்றப்படுகிறதோ, அதை கண்டறிந்து தடுப்பதற்கு தமிழ்நாடு காவல்துறையில் தனி அணி எதுவும் போடப்பட்டுள்ளதா? இதே வேலையாய் திரிகிறார்கள். விடுதலைச்சிறுத்தைகளின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில், மீண்டும் தி.மு.க.வை சாடியுள்ளார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.