இவ்வளவு முட்டு கொடுத்தும் வீணா போச்சே: முதல்வர் தந்த   ஒப்புதல் வாக்குமூலம்!

இவ்வளவு முட்டு கொடுத்தும் வீணா போச்சே: முதல்வர் தந்த ஒப்புதல் வாக்குமூலம்!

Share it if you like it

அண்ணாமலையின் குற்றச்சாட்டிற்கு ஆர்.எஸ். பாரதி மறுப்பு தெரிவித்திருக்கும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசிய காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி தி.மு.க.வின் சொத்துப்பட்டியலை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அண்ணாமலையின், இந்த அதிரடி அரசியலை கண்டு தி.மு.க. மேலிடம் தற்போது கடும் பதற்றத்தில் இருந்து வருகிறது. இதனை, எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தமிழக முதல்வர் குடும்பம் திணறி வருவதாக சொல்லப்படுகிறது. இதனிடையே, ‘நோபல் ஸ்டீல்’ நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் செய்த ஒப்பந்தத்தின் மர்மம் என்னவென்று அண்ணாமலை கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு, தி.மு.க. மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி ’நோபல் ஸ்டீல்’ நிறுவனத்துடன் தி.மு.க. ஒப்பந்தம் செய்யவில்லை என்று கூறினார். இந்த நிலையில் தான், நோபல் ஸ்டீல் நிறுவனத்துடன் தி.மு.க. ஒப்பந்தம் செய்துள்ளது என்பதை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒப்புக்கொண்டு பேசிய காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it