சின்ன பையன் சார் அண்ணாமலை:  அவரிடம் மாட்டி சீரழிகிறார் ஸ்டாலின்… கார் டிரைவரின் காணொளி வைரல்!

சின்ன பையன் சார் அண்ணாமலை: அவரிடம் மாட்டி சீரழிகிறார் ஸ்டாலின்… கார் டிரைவரின் காணொளி வைரல்!

Share it if you like it

தி.மு.க.வின் சொத்துப்பட்டியல் குறித்து கார் டிரைவர் ஒருவர் பேசிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் நகர்வலம் வந்துகொண்டிருக்கிறது.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. இவர், அண்மையில் தி.மு.க.வின் சொத்துப்படியலை வெளியிட்டார். இதுதான், தற்போது பொதுமக்கள் மத்தியில் பேசுப்பொருளாக மாறியிருக்கிறது. அண்ணாமலை முன்வைத்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் தி.மு.க. மேலிடம் திணறி வருகிறது. தவிர, தி.மு.க.வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தொடர்ந்து அண்ணாமலையை குறிவைத்து தாக்கி வருகின்றனர்.

அண்மையில், தி.மு.க.வின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி பா.ஜ.க. தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்தார். இப்படியாக, தி.மு.க.வின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் தான், கார் டிரைவர் ஒருவர் அண்ணாமலை மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. டிரைவரின் காணொளி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்ணாமலையிடம் மாட்டிக்கொண்டு முதல்வர் முழிக்கிறார் என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.


Share it if you like it