தி.மலையில் சங்கு ஊதுவதில் சாதுக்கள் சாதனை!

தி.மலையில் சங்கு ஊதுவதில் சாதுக்கள் சாதனை!

Share it if you like it

திருவண்ணாமலையில் சங்கு ஊதுவதில் உலக சாதனை படைக்கப்பட்டது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஆந்திரா மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த பசி பவுண்டேஷன் மற்றும் வஜ்ர வராகி பீடம் என்கிற ஹிந்து அமைப்பு ஆகியவை இணைந்து சங்கு ஊதுவதில் உலக சாதனை படைக்க முடிவு செய்தது. அதன்படி, தமிழ்ப் புத்தாண்டு தினமான சித்திரை 1-ம் தேதி, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில், உலக சாதனை முயற்சியை நடத்தியது. ஏற்கெனவே, ஒரே நேரத்தில் 1008 நபர்கள் சங்குகளை தொடர்ந்து 15 வினாடிகளுக்கு ஒருமுறை என 3 முறை முழங்கியது உலக சாதனை முயற்சியாக இருந்தது. இதை முறியடிக்க 1,039 நபர்கள் தொடர்ந்து 26.2 வினாடிகள் சங்குகளை ஊதி உலக சாதனை நிகழ்வுகளை நிகழ்த்தினார்கள்.

இந்த உலக சாதனை நிகழ்ச்சிக்காக, 1.000-க்கும் மேற்பட்ட சன்னியாசிகள் வரவழைக்கப்பட்டு, சங்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை, கரகம், கடவுள் வேடமணிந்து நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்காக கல்லூரி வளாகத்தில் காவிக் கொடி ஏற்றி, மேடை அமைத்து அதகளம் செய்திருந்தனர்.


Share it if you like it