இந்த அம்மா ஒரு SC… அமைச்சர் அறிமுகம் செய்து வைத்த லட்சணம்!

இந்த அம்மா ஒரு SC… அமைச்சர் அறிமுகம் செய்து வைத்த லட்சணம்!

Share it if you like it

அரசு நிகழ்ச்சியில், கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி நீங்கள் எஸ்.சி. தானே என பெண் ஒன்றிய செயலாளரிடம் கேட்டு அறிமுகம் செய்து வைத்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

எதிர்க்கட்சி வரிசையில் தி.மு.க. இருக்கும் சமயத்தில், ஏற்ற தாழ்வுகளை சமூகத்தில் இருந்து நீக்க வேண்டும் என பேசக்கூடியவர்கள். ஜாதியை, தமிழகத்தில் இருந்து முற்றிலும் ஒழிக்க வேண்டும் என மேடைதோறும் முழங்க கூடியவர்கள். தி.மு.க. ஆட்சியில் அமரும் பட்சத்தில், ஹிந்துக்களின் உரிமைகள் மட்டுமில்லாது சிறுபான்மை மக்களின் உரிமைகளும் நசுக்கப்படும் என்பதே நிதர்சனம். இதுதவிர, பட்டியல் சமூகத்தை சேர்ந்த மக்கள் தொடர்ந்து அவமதிக்கப்படுவர் என்பதே நிதர்சனம்.

இதனிடையே, தி.மு.க.வின் மூத்த தலைவரும் நீர்வளத்துறை அமைச்சருமாக இருப்பவர் துரைமுருகன். இவர், அக்கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது ; தந்தை பெரியாரை அருகில் இருந்து பார்த்துக் கொள்ளும் வாய்ப்பு எனக்கு ஒருமுறை கிட்டியது. அப்போது, பெரியார் உன் பெயர் என்னவென்று கேட்டார். நான் துரைமுருகன் என்று கூறினேன். நீ எந்த ஊர் என்று கேட்டார் என் ஊரின் பெயரை கூறினேன். நீ எந்த ஜாதி என்று கேட்டார் வன்னியர் என்று கூறினேன். நீயும் பறையன் மாதிரிதான் என பெரியார் கூறியதாக துரைமுருகன் பேசிய காணொளி பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இப்படிப்பட்ட சூழலில், விழுப்புரம் மாவட்டம் மணம் பூண்டியில் நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அப்போது, பேசிய அமைச்சர், ஆண் பெண் சமம். இந்த, ஊரில் ஒன்றிய செயலாளராக இருப்பவர் ஒரு பெண். இவர், ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர். இந்த, ஒன்றியத்தின் தலைவராக இருக்கிறார் என்றால் அதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என குறிப்பிட்டு இருக்கிறார்.


Share it if you like it