இந்தியாவிலேயே மிகச் சிறந்த எம்.எல்.ஏ. உதயநிதிதான் – தயாநிதி புகழாரம்!

இந்தியாவிலேயே மிகச் சிறந்த எம்.எல்.ஏ. உதயநிதிதான் – தயாநிதி புகழாரம்!

Share it if you like it

இந்தியாவிலேயே மிகச் சிறந்த எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின்தான் என்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வெகுவாக பாராட்டியுள்ளார். இந்த காணொளிதான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவரை தான், தி.மு.க. வின் மூத்த தலைவரும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் வெகுவாக பாராட்டி இருக்கிறார். அதாவது, இந்தியாவிலேயே, மிகச்சிறந்த சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்தான் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது என வெகுவாக பாராட்டியுள்ளளார். எம்.பி.யின் கருத்திற்கு, வலுசேர்க்கும் விதமாக அமைச்சர் சேகர்பாபு தனது பங்கிற்கு சேப்பாக்க சேகுவேராவை பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், விவரங்களுக்கு தந்தி டிவி லிங்க கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it