இதுதான் விடியல் அரசா?… ஹிந்து ஆலயங்கள் மீது தொடரும் தாக்குதல்கள்!

இதுதான் விடியல் அரசா?… ஹிந்து ஆலயங்கள் மீது தொடரும் தாக்குதல்கள்!

Share it if you like it

தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து ஹிந்து ஆலயங்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், திருவள்ளுர் மாவட்டத்தில் புகழ் பெற்ற அம்மன் கோவிலை மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தி இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில், தி.மு.க. ஆட்சி அமைந்த பின்பு 100-க்கும் மேற்பட்ட கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன. இதற்கு, தமிழக அரசு பல்வேறு காரணங்களை கூறி வருகிறது. இருப்பினும், விடியல் ஆட்சியில் ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் வழிபாட்டு முறைகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது என்பதே நிதர்சனம். அனைவருக்குமான, அரசாக தி.மு.க இருக்கும் என கடந்த சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் கூறியிருந்தார். இருப்பினும், விடியல் ஆட்சியில் நிகழும் அவலங்களை பார்க்கும் போது அவர் கூறியது சுத்தபொய் என்பது தொடர்ந்து அம்பலமாகி வருகிறது.

இதனிடையே, யூ டூ புரூட்டஸ் எனும் இணையதள ஊடகத்தை நடத்தி வருபவன் மைனர் விஜய். இவன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிதம்பர நடராஜரை பற்றி அவதூறாக பேசி இருந்தான். கோடிகணக்கான ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திய அவன் மீது எந்தவிதமான நடவடிக்கைகளையும் இந்த விடியல் அரசு மேற்கொள்ளவில்லை. அதேபோன்று, ஹிந்துக்களின் நம்பிக்கையை காயப்படுத்தி வரும் வி.சி.க. தலைவரும் பிரபல ஆபாச பேச்சாளருமான திருமாவளவன் மற்றும் வன்னியரசு மீது இதுவரை எந்தவித நடவடிக்கையையும் இந்த அரசு மேற்கொள்ளவில்லை.

ஒருபுறம், கோவில்களை தமிழக அரசே இடிக்கும் காணொளிகளை நம்மால் பார்க்க முடிகிறது. மறுபுறம், தி.க, தி.மு.க. வி.சி.க.வை சேர்ந்தவர்களின் அருவருக்கதக்க பேச்சு. இன்னொரு பக்கம், மர்ம நபர்கள் கோவில்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தான், திருவள்ளுர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை அடுத்துள்ள கிராமம் ஆதிவராகபுரம். இக்கிராமத்தில், நிம்மாளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், உள்ள அம்மன் சிலையை யாரோ மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு பாலிமர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

22 சுவாமி சிலைகள் உடைப்பு: ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு!
ஸ்ரீபெரும்புதூரில் உடைக்கப்பட்ட 22 சுவாமி சிலைகள்


Share it if you like it