கோவை குண்டு வெடிப்பு : பா.ஜ.க. தலைவர் காட்டம்!

கோவை குண்டு வெடிப்பு : பா.ஜ.க. தலைவர் காட்டம்!

Share it if you like it

கோவை குண்டு வெடிப்பு குறித்து இதுவரை வாய் திறக்காத தமிழக முதல்வரை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியிருக்கிறார்.

பொதுவாக தி.மு.க. ஆட்சி வந்தால் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதனை உறுதிப்படுத்தும் வகையில், கழக கண்மணிகள், தி.மு.க.வை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க கொலை, கொள்ளை, திருட்டு, என தமிழகமே தற்போது அரண்டு போய் இருக்கிறது.

இதனிடையே, கோவை நகரில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அமைந்திருக்கிறது. இக்கோயிலுக்கு, அருகில் சென்று கொண்டிருந்த மாருதி ஆல்டோ கார், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அதிகாலை திடீரென வெடித்துச் சிதறியது. இதில், காருக்குள் இருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த போலீஸார், சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது, காரில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அதேவேளையில், வெடித்துச் சிதறிய காருக்குள் ஏராளமான பால்ரஸ் குண்டுகளும், ஆணிகளும் அதிகமாக தெறித்துக் கிடந்தன. இதை தடய அறிவியல் துறையினர் கண்டுபிடித்தனர். இதனால், இச்சம்பவம் சதித் திட்டமாக இருக்கலாம் என்று தமிழக காவல்துறையினர் சந்தேகித்து இருந்தனர்.

இதனை தொடர்ந்து, கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையை போல கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக பல்வேறு செய்திகளை ஊடகங்களும், பத்திரிகைகளும் மாறி மாறி வெளியிட்டு வருகின்றன. தமிழக மக்கள் தற்போது கடும் அதிர்ச்சியிலும், பயத்திலும் உறைந்து போய் இருக்கிறனர். மக்களின் அச்சத்தை போக்கும் வகையில், நாட்டு மக்களை சந்தித்து நம்பிக்கை அளிக்க வேண்டிய பொறுப்பு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உண்டு. ஆனால், அவரே வெளியில் வர அச்சப்பட்டு வீட்டில் பதுங்கி கொண்டு இருப்பது என்ன நியாயம்? இப்படி பயப்படும் முதல்வர் தான் இந்தியாவின் நம்பர் முதல்வரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் தான் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில்,

கோவையில் குண்டு வெடிப்பு நடந்து 36 மணி நேரங்கள் கடந்துவிட்டன. ஆனால் இப்பொழுது வரை முதல்வர் மக்களை சந்தித்து இதைப்பற்றி பேச தயங்குவது ஏன்? இதுவரை தமிழகம் கண்டிராத தற்கொலைப்படை தாக்குதல் இந்த திறனற்ற திமுக ஆட்சியில் நடந்துவிட்டது. உயிர் சேதம் ஏற்படும் வரை காத்திருப்பீர்களா? என கடுமையாக சாடியிருக்கிறார்.

கோவையில் கார் வெடித்த வழக்கில் 5 பேர் கைது. கார் வழங்கியது மற்றும் வெடி மருந்து பொருட்களை பதுக்கல் தொடர்பாக வழக்கு.


Share it if you like it