திராவிட மாடல் பஸ்: பள்ளி மாணவர்கள் தள்ளிய அவலம்!

திராவிட மாடல் பஸ்: பள்ளி மாணவர்கள் தள்ளிய அவலம்!

Share it if you like it

அரசு பேருந்தை பள்ளி மாணவர்கள் தள்ளி சென்ற அவலம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏழை எளியவர்கள் மற்றும் நடுத்தர மக்கள் அவசர பயணமாக வெளியே செல்ல வேண்டுமெனில் தேர்வு செய்வது அரசு பேருந்தை தான். அந்த அளவிற்கு அரசு பேருந்தின் முக்கியத்தும் இருந்து வருகிறது. இதுதவிர, பேருந்தில் பயணம் செய்யும் மக்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு மாநில அரசின் கடமை என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

இதனிடையே, தமிழகத்தில் தி.மு.க. அரசு அமைந்த பின்பு, போக்குவரத்து துறை என்பது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. இதுதவிர, அந்த துறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பல்வேறு விமர்சனங்கள் இன்று வரை எழுந்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 5 மாதங்களாக தி.மு.க. ஆட்சியில் டயர் வாங்க நேரமில்லை ஆனால் ஸ்வீட் பாக்ஸ் வாங்க ரூ .100 கோடி கம்பெனியிடம் டென்டர் விட நேரம் இருக்கிறதா? என்று தமிழக அரசிற்கு பிரபல அரசியல் விமர்சகர் செல்வ குமார் கடந்த ஆண்டு கேள்வி எழுப்பி இருந்தார்.

இதனை தொடர்ந்து, கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மாரநாடு பகுதியிலிருந்து, மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த நகர்ப்பேருந்து, திருப்புவனம் சந்தை திடல் பேருந்து நிலையம் அருகில் வரும் போது பேருந்தின் இடது பக்கம் உள்ள முன் சக்கரம் திடீரென்று தனியாக கழன்று ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அக்காணொளியை, இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும்.

இந்த நிலையில் தான், வேலூர் மாவட்டத்தில் மற்றொரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதாவது, குடியாத்தில் இருந்து மோர்தானா செல்லும் அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் பலர் பயணம் மேற்கொண்டு இருக்கின்றனர். அப்போது, அரசு பேருந்து பாதி வழியிலேயே பழுதடைந்து நின்று விட்டது. இதையடுத்து, பஸ்ஸில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் அனைவரும் திராவிட மாடல் பேருந்தை தள்ளி செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

திராவிட மாடல் கழிவறை, திராவிட மாடல் கால்வாய், திராவிட மாடல் சுவரை தொடர்ந்து தற்போது திராவிட மாடல் பஸ்ஸின் காணொளி வைரலாகி வருகிறது.


Share it if you like it