தி.மு.க. மூத்த தலைவர் கருத்து:  பா.ஜ.க. நிர்வாகிகள் அனுப்பி வைத்த பரிசு!

தி.மு.க. மூத்த தலைவர் கருத்து: பா.ஜ.க. நிர்வாகிகள் அனுப்பி வைத்த பரிசு!

Share it if you like it

தி.மு.க. மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதிக்கு, காஞ்சிபுர மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் அலுமினிய தட்டை பரிசாக அனுப்பி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். இதையடுத்து, அவர் பேசும் இவ்வாறு கூறினார் ;

“பா.ஜ.க. ஒரு ரூமில் இருக்கக் கூட முடியாத கட்சி. அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினால், 2 நாள் சென்ட்ரல் ஜெயிலில் வைத்தால் போதும், அக்கட்சியே இருக்காது. (சென்ட்ரல் ஜெயில் தற்போது பயன்பாட்டில் இல்லை என்பது கூட தெரியாத ஆர்.எஸ். பாரதி ) அதேபோல, மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினால் ஒரு நாள் இரவு மட்டும் ஜெயிலில் வையுங்கள், ஜட்டி கிட்டி எல்லாம் கழட்டிருவானுங்க.

கவர்னருக்கு சம்பளம் குடுக்கிறது நம்ம வரிப்பணத்துலதான். அவன் டீக்குடிக்கிறதுல இருந்து அவன் போடுற சொக்காய் கிளீன் பண்றவனுக்கு சம்பளம் குடுக்குறது வரை நீயும், நானும் குடுக்குற வரிப்பணத்துலதான். நம்மகிட்ட வரிப்பணத்த வாங்கி, நம்ம செலவுல உட்கார்ந்திருக்குற கவர்னர், ராஜ்பவன்ல கூட்டம் நடத்தி, திராவிடம்கிற ஒரு நாடே கிடையாதுங்குறான். ஐ.பி.எஸ். படிச்சுட்டு வர்றவனுங்க பூராம் மெண்டல்களாகத்தான் இருப்பானுங்கபோல. எல்லா சமூக விரோதியும், அண்ணாமலை தலைவரான பிறகு பா.ஜ.க.வில் மெம்பராகி விட்டார்கள். தி.மு.க.வுக்கு யாரேனும் துரோகம் செய்தால் விளைவு வேறு விதமாக இருக்கும். ஒன்று அவர்கள் நீதிமன்றத்துக்குப் போக வேண்டும் அல்லது கை,கால் இல்லாமல் போக வேண்டும்” என்று கை,கால்களை வெட்டிவிடுவோம் என்கிற ரீதியில் பேசி இருந்தார். ஆர்.எஸ். பாரதியின் இந்த இழிவான பா.ஜ.க.வினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

இப்படிப்பட்ட சூழலில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ஆர்.எஸ். பாரதி குறித்த கேள்வியினை நிருபர்கள் முன்வைத்தனர். இதற்கு, பா.ஜ.க. தலைவர் கூறியதாவது;

ஆர்.எஸ். பாரதிக்கு இருக்கும் ஒரே தகுதி அறிவாலய வாசலில் அமர்ந்து பிச்சை எடுப்பது. அங்கே உட்கார்ந்தால் மட்டுமே கோபாலபுர குடும்பம் காலம் காலமாக பிச்சைபோடும் என மூன்று நான்கு பேர் அங்கு அமர்ந்து கொண்டு இருக்கின்றனர் என காட்டமாக பதில் அளித்திருந்தார்.

பா.ஜ.க. தலைவரின் கருத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ’அறிவாலயம் எனது கோவில் என்று ஆர்.எஸ். பாரதி கூறியிருக்கிறார். தி.மு.க. மூத்த தலைவரின் கருத்தினை தொடர்ந்து, காஞ்சிபுர மாவட்ட பா.ஜ.க. தலைவரும் அக்கட்சியை சேர்ந்த தொண்டர்களும் ஆர்.எஸ். பாரதியின் முகவரிக்கு 5 அலுமினிய தட்டினை பரிசாக அனுப்பி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it