தமிழக வரலாற்றில் முதல்முறையாக புஃட்போர்டு அடித்த பெண் மேயர்!

தமிழக வரலாற்றில் முதல்முறையாக புஃட்போர்டு அடித்த பெண் மேயர்!

Share it if you like it

முதல்வரின் கான்வாயில் மேயர் பிரியா தொங்கிய படி சென்ற சம்பவத்திற்கு பலர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

சமூகநீதி, சுயமரியாதை, பெண் விடுதலை, என மேடைதோறும் பேச கூடியவர்கள் தி.முக. தலைவர்கள். எனினும், அதனை தாங்கள் மட்டும் துளியும் கடைப்பிடிக்க மாட்டார்கள் என்பதை தமிழகமே நன்கு அறியும். அதற்கு, பல்வேறு உதாரணங்களை குறிப்பிட்டு கூறலாம். இதனிடையே, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ’மாண்டஸ் புயல்’ பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஏழை, எளியவர்களுக்கு, தங்களால் இயன்ற உதவிகளை பல்வேறு தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து செய்து வருகின்றன. அந்தவகையில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ஜ.க. தொண்டர்கள் உதவி செய்ய தயாராக இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதன்படி, பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்ணையும் வழங்கி இருக்கிறார். தொடர்புக்கு ; 9150021831, 9150021832, 9150021833

இப்படிப்பட்ட சூழலில், சென்னை காசி மேட்டில் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் சென்று இருக்கிறார். அவருடன், சென்னை மேயர் பிரியா, கமிஷனர் ககன்தீப் சிங் பேடி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சென்றனர். இவர்களை, காரில் ஏற்றாமல் தனது அல்லகைகளை மட்டும் ஏற்றிற்கொண்டு முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டார்.

இதனால், அதிர்ச்சியடைந்த மேயர் பிரியா, ஆணையர் ககன்தீப் சிங் உள்ளிட்டோர் பதறி அடித்து கொண்டு ஸ்டாலின் பாதுகாப்புக்கு சென்ற காரில் புஃட்போர்டில் ஏறி தொங்கிய படி பயணித்தனர். இதனை, பார்த்த பொதுமக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இக்காணொளிதான், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it