மாமூல் தரமறுத்த பா.ஜ.க. தொண்டரின் கடையை அடித்து நொறுக்கிய தி.மு.க. நிர்வாகிகளின் செயலுக்கு பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த, ஆட்சியில் பொதுமக்கள் கடும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. இதுதவிர, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து சந்தி சிரித்து வருகிறது. தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ., அமைச்சர் மற்றும் எம்.பி.க்கள் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் தான், தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகிகள் இருவர் பா.ஜ.க. தொண்டரை மிக கடுமையாக தாக்கி இருக்கின்றனர். அதாவது ;
சென்னை கோயம்பேட்டில் இரவு நேர தள்ளுவண்டி டிபன் கடை நடத்தி வருபவர் தேவேந்திரன். இவரிடம், தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகிகளான விஸ்வநாதன் மற்றும் முத்துவும் சேர்ந்து ரூ. 500 மாமூல் கேட்டு உள்ளனர். வியாபாரம் படுமோசமாக உள்ளது. என்னால், அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இதையடுத்து, தி.மு.க. நிர்வாகிகள் பா.ஜ.க. தொண்டரிடம் கடும் வாக்குவாதம் செய்துள்ளனர்.
இதனிடையே, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று விட்டு தி.மு.க. நிர்வாகிகள் வீடு திரும்பி இருக்கின்றனர். இதனை தொடர்ந்து, தேவேந்திரன் கடைக்கு சென்ற இருவரும் மாமூல் கேட்டால் தரமாட்டியா? நாங்கள் யார் தெரியுமா? என்று மீண்டும் வாக்குவாதம் செய்து இருக்கின்றனர்.
போலீஸ் எங்களை ஒன்றும் (ஆபாச திட்டு ) செய்ய முடியாது என்று கூறி விட்டு தேவேந்திரனையும் அவரது கடையையும் தி.மு.க. நிர்வாகிகள் அடித்து நொறுக்கி இருக்கின்றனர். இதுதவிர, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.