தி.மு.க. நிர்வாகிகள் ஜெயிலுக்கு செல்வது உறுதி என பா.ஜ.க. மூத்த தலைவர் அஸ்வத்தாமன் பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
தமிழகத்தின் நடப்பாண்டிற்கான முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் கடந்த 9-ம் தேதி துவங்கியது. இந்த கூட்டத்தொடரில், தனது உரைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்ததால், கவர்னர் வெளிநடப்பு செய்து செய்தார். இதனால், கவர்னர் மீது தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் தொடர்ந்து அவதூறு பிரச்சராத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக, சமூக வலைத்தளங்களில் கெட் அவுட் ரவி என்று ஹேஷ்டேக் உருவாக்கி கழக கண்மணிகள் டிரெண்ட் செய்து இருந்தனர். அதேபோல, தி.மு.க. நிர்வாகிகள் பலரும் கவர்னரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஆளுநரை `போய்யா’ என்று பேரவையில் ஒருமையில் கத்திய காணொளியை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் மாநில செயலாளருமான அஸ்வத்தாமன்
யூ டியூப் இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிறார் ; ஆளுநரையோ அல்லது ஜனாதிபதியின் வேலையை தடுக்கும் விதமாக செய்கை மூலமாக தடுக்கும் நோக்கத்தில் செயல்பட்டால் 124 சட்டத்தின் படி அது 7 ஆண்டுகள் தண்டனைக்கு உரிய குற்றம். அவை சிறிய குற்றம் அல்ல. அதனை பொன்முடி செய்து இருக்கிறார். இதனை, மறைமுகமாக தூண்டும் விதமாக ஸ்டாலின் செய்துள்ளார். தி.மு.க.வின் ஐ.டி.விங்கிற்கு இதனை நான் எச்சரிக்கையாக சொல்கிறேன். இது, சட்டப்படி குற்றம். நிச்சயம் அவர்கள் கம்பி எண்ணுவார்கள் என அஸ்வத்தாமன் பேசியிருக்கிறார். இதனிடையே, ஆளுநரை பணி செய்ய விடாமல் அவையில் ரகளை செய்த வி.சி.க., கம்யூ., காங்., எம்.எல்.ஏ.க்கள் மீது அஸ்வத்தாமன் காவல்துறையில் புகார் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.