நியூஸ் 18 விவாதத்தில் கலந்து கொண்ட தி.மு.க.வின் மாணவர் அணி தலைரை வழக்கறிஞர் தமிழ்மணி பங்கம் செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை வரவழைத்துள்ளது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்வி எழுப்பும் அ.தி.மு.க. அரசியலா? அக்கறையா, எனும் தலைப்பில் நியூஸ் – 18 விவாதம் ஒன்றினை நேற்றைய தினம் நடத்தியது. இதில், தி.மு.க. மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி, வழக்கறிஞர் கே. ஆர். தமிழ்மணி, அப்துல் சமது எம்.எல்.ஏ., மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம், அரசியல் விமர்சகர் கண்ணன் மற்றும் நெறியாளர் கார்த்திகைச் செல்வன் உள்ளிட்டவர்கள் இந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அந்த வகையில், ராஜீவ் காந்தி பேசும் போது இவ்வாறு கூறினார் ; நீங்கள் ஒரு பத்திரிகையாளராக, நியூஸ் – 18 நெறியாளராக சொல்லுங்கள். ஏதோ ஒரு சம்பவம் நடைபெற்று முதல்வரின் கவனத்திற்கோ அல்லது காவல்துறையினர் கவனத்திற்கோ கொண்டு சென்று எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்யப்படாமல் இருந்து உள்ளதா. அதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின் பேசவில்லை என்று ஒரு சம்பவத்தை நீங்கள் காட்ட முடியுமா? என்கிற ரிதீயில் ராஜீவ்காந்தி சவால் விடுக்கும் வகையில் பேசினார்.
இதற்கு, தமிழ்மணி தி.மு.க.வின் சிட்டிங் எம்.எல்.ஏ. மறைமலைநகர் அருகே உள்ள தொழிற்சாலையில் உள்ளவர்களை மிரட்டினார். அவர்களை ஏன்? தி.மு.க. அரசு கைது செய்யவில்லை என்று நோஸ்கட் கொடுக்கும் விதமாக பேசினார். இதற்கு, என்ன? பதில் சொல்வது என்று தெரியாமல் வழக்கம் போல கம்பி கட்டும் கதையை ராஜீவ் காந்தி கூறியதுதான் இதில் ஹைலைட்.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.