திருப்பூர் ஹிந்து முன்னணி நிர்வாகிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வாபஸ் வாங்கப்பட்டு இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில், ஹிந்துக்களின் உணர்வுகள், பண்பாடு, கலாச்சாரம் மற்றும் வழிபாட்டு முறைகள் தொடர்ந்து இழிவுப்படுத்தப்படுகின்றன. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, தி.மு.க. நிர்வாகிகள், அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்கள் பேசி வருகின்றனர்.
அந்தவகையில், ஹிந்து ஆலயங்கள் தொடர்ந்து இடிக்கப்படும் காணொளிகளையும், இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். இப்படியாக, இருண்ட ஆட்சியை ஸ்டாலின் அரசு வழங்கி வருகிறது என்பதே கசப்பான உண்மை. அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஹிந்து முன்னணி நிர்வாகிகளுக்கு இதுநாள் வரை வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதாவது, திருப்பூரில் ஏற்கனவே சிட்டி கமிஷனராக இருந்தவர் பிரபாகரன். இவருக்கும், அம்மாவட்டத்தை சேர்ந்த ஹிந்து முன்னணி நிர்வாகிகளுக்கும் ஏழாம் பொருத்தம் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கமிஷனரை வேறு இடத்திற்கு தமிழக அரசு இடம் மாற்றம் செய்து இருக்கிறது. அந்த வகையில், கமிஷனர் பிரபாகரன் தனது பழைய பகையை மனதில் வைத்து கொண்டு ஹிந்து முன்னணி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை ரத்து செய்து விட்டதாக கூறப்படுகிறது. கோவை மாவட்டத்தில் சமீபத்தில் நிகழ்த்தப்பட இருந்த மிகப்பெரிய குண்டு வெடிப்பு சம்பவம் இன்றுவரை தமிழக மக்களிடையே பேசுப்பொருளாக இருந்து வருகிறது. இதுதவிர, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணணாமலை மீதும் ஹிந்து அமைப்புகள் மீதும் கடும் கோவத்தில் இருந்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில்தான், திருப்பூர் மாவட்ட ஹிந்து முன்னணி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹிந்துக்களுக்கும், ஹிந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளுக்கும் தொடர்ந்து விடியல் ஆட்சியில் அநீதி இழைக்கப்படுவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.