தி.மு.க. கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள் கிடப்பில் உள்ளது. இந்த நிலையில், தமிழக முதல்வரை கிண்டல் விதமான ’வாயாலே வடை சுடுவார் என்று பாடல் வைரலாகி வருகிறது.
கடந்த 2021 – ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. அத்தேர்தலில், பல்வேறு வாக்குறுதிகளை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கொடுத்தார். பூரண மதுவிலக்கு, நீட் தேர்வு ரத்து, பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், பழைய ஓய்வூதிய பென்ஷன் என பல்வேறு வாக்குறுதிகளை தி.மு.க. கொடுத்து இருந்தன. விடியல் ஆட்சி அமைந்து இரண்டு வருடங்களை பூர்த்தி செய்ய உள்ளன.
எனினும், தி.மு.க. கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள் இன்று வரை முழுமையாக நிறைவேற்றபடாமல் கிடைப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனையெல்லாம், மறைத்து விட்டு இதுதான் ’திராவிட மாடல் அரசின் சாதனை’ என தமிழக முதல்வர் ஸ்டாலின் வடிவேலு பாணியில் கம்பு சுற்றி வருகிறார்.
இப்படிப்பட்ட சூழலில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தி.மு.க. அரசிடம் முன்வைத்த கேள்வி இதோ ;
முற்றிலும் ஆங்கிலத்தில் பெயர்ப்பலகை வைத்திருக்கும் நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும். அதேபோல், ‘திராவிட மாடல்’ என கூறப்படுகிறது. அந்த திராவிட மாடலில், மாடல் என்ற ஆங்கிச் சொல்லுக்கு தமிழ் சொல் என்ன? மாடல் என்ற சொல்லை ஏன்? ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறீர்கள் முற்றிலும் தமிழிலேயே பன்படுத்தலாமே என கேள்வி எழுப்பி இருந்தது.
இந்த நிலையில் தான், “மாடல்” என்ற சொல்லுக்கு ’திராவிட வடை’ என்று சொல்லலாம் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் ’ஹேஷ் டேக்’ உருவாக்கியுள்ளனர். இதனை, தற்போது ட்விட்டரில் டிரெண்டிங் செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து, வாயாலே வடை சுடுவார் என்ற காணொளியும் வைரலாகி வருகிறது.