அயோத்தி ராமர் கோவிலுக்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரலாற்று ரிதியாக நெடிய போராட்டம். 70 ஆண்டு கால சட்ட போரட்டம் என பல்வேறு போராட்டங்களை கண்ட கோவில்தான் அயோத்தி ராமர் கோவில். ஹிந்துக்களின், புனித வழிபாட்டு தலங்களில் ஒன்றாக இது இருந்து வருகிறது. கோடி கணக்கான ராம பக்தர்களின் உணர்வுகளோடு இது பின்னி பிணைந்த கோவிலாகவும் இருந்து வருகிறது. இக்கோவிலை, வைத்து பிரிவினை அரசியல் செய்து வந்த பாகிஸ்தான், சீனா, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் உள்ளூர் தீய சக்திகளுக்கு டெல்லி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் இடியாக மாறியிருந்தது. இந்த வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்த பெருமை பாரதப் பிரதமர் மோடியை சாரும்.
எனினும், இக்கோவிலுக்கு எதிராக பிரிவினை சக்திகள், பாகிஸ்தான் மற்றும் சர்வதேச பயங்கரவாதிகள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தான், அயோத்தியை சேர்ந்த ஒருவரது வீட்டிற்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர் ராமர் கோயிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என கூறிவிட்டு இணைப்பை அவர் துண்டித்துள்ளார். இது தொடர்பான தகவல், கோவில் அதிகாரி சஞ்சீவ்குமாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் ராமஜென்ம பூமி பகுதி காவல் நிலையத்தில் கார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.