விநாயகர் சதுர்த்திக்கு ஜமாத் அனுமதி தேவை: தமிழ்நாடா… பாகிஸ்தானா?

விநாயகர் சதுர்த்திக்கு ஜமாத் அனுமதி தேவை: தமிழ்நாடா… பாகிஸ்தானா?

Share it if you like it

விநாயகர் சதுர்த்தியை கொண்டாட ஜமாத்தின் அனுமதி கடிதம் தேவை சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து இருப்பது ஹிந்துக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹிந்துக்களின் புனித கடவுளாக இருப்பவர் விநாயக பெருமான். இவரின், பண்டிகையான விநாயகர் சதுர்த்தி வரும் புதன் கிழமை இந்தியாவை கடந்து உலகம் முழுவதும் கொண்டாட பட உள்ளது. அந்த வகையில், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் விதமாக, தற்போது ஹிந்துக்கள் தயாராகி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட ஜமாத் கடிதம் தேவை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து இருப்பது ஹிந்துக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்தான செய்தியினை தினத்தந்தி வெளியிட்டு இருக்கிறது.

அதில், கூறப்பட்டு இருப்பதாவது ;

கோவை உக்கடம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் பிள்ளையார் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி கேட்டு பெரியகடை வீதி காவல் நிலையத்தில் மகாலட்சுமி என்பவர் மனு கொடுத்து இருக்கிறார். இதற்கு, அப்பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் பேர் வசிப்பதால் காவல்துறையினர் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் மகாலட்சுமி வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இந்த வழக்கு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரனணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பிற மதத்தினரும் சம்மதம் தெரிவித்து இருக்கின்றனர். அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ஆகவே, நீதிபதி அனுமதி வழங்க வேண்டும் என முறையிட்டு இருக்கிறார். மனுதாரர் குடியிருப்பு பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட ஆட்சேபனை இல்லை என ஐமாத் அமைப்பினரிடம் இருந்து கடிதத்தை பெற்று காவல்துறையினர் தாக்கல் செய்ய வேண்டும்.

அவ்வாறு, கடிதம் கொடுக்கும் பட்சத்தில், மனுதாரர் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டும். மேலும், அதற்குரிய பாதுகாப்பை காவல்துறையினர் உறதி செய்ய வேண்டும் என நீதிபதி தெரிவித்து இருக்கிறார். இதுதவிர, மனுதாரரும் விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியை நடத்த வேண்டும். நிகழ்ச்சியை கொண்டாட மட்டுமே அனுமதி வழங்ககப்படுமே, தவிர சிலையை ஊர்வலம் எடுத்துச் செல்லக் கூடாது நீதிபதி தெரிவித்து இருப்பதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டு இருக்கிறது.

கோவை

Pegasus (@srao7711) / Twitter

Share it if you like it