தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு செல்வது கடவுள் இருக்கா என ஆராய்ச்சி செய்ய தான் என தி.மு.க. நிர்வாகி பேசி இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவர் மறைந்த வெற்றிகொண்டான். இவர், மாற்று கட்சியை சேர்ந்த தலைவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்காமல் ஆபாசமாக பேசுவதை வாடிக்கையாக கொண்டவர். குறிப்பாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து வெற்றிகொண்டான் பேசிய பேச்சியின் வாயிலாக தி.மு.க.வின் கீழ்த்தரமான அரசியலை அறிவார்ந்த தமிழக மக்கள் நன்கு அறிந்து கொள்ள முடியும். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியது போன்று தி.மு.க. அட்டாக் லேயரின் முன்னோடிகளுக்கு எல்லாம் முன்னோடியாக இருந்தவர் வெற்றிகொண்டார் என்பதே நிதர்சனம்.
இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க. தலைமைக் கழக வழக்கறிஞரும், வெற்றிகொண்டானின் மகனுமான சூர்யா வெற்றிகொண்டான் ஏ.பி.பி. நாடு இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;
மக்களை காக்க வைத்து சபரீசன் யாகம் நடத்தியது சரியா? என ஏ.பி.பி. நாடு ஊடக நெறியாளர் கேள்வி ஒன்றினை சூர்யாவிடம் முன்வைக்கிறார். கடவுள் இருக்கா? இல்லையா? என்பதை கண்டுபிடிக்க தான் நாங்கள் யாகம் நடத்தினோம் என தெரிவித்து இருக்கிறார். துர்கா ஸ்டாலின், சபரீசன் கோவிலுக்கு செல்வது கடவுள் இருக்கா? இல்லையா? என்பதை பார்க்க தானா என நெறியாளர் மீண்டும் ஒரு கேள்வியை முன்வைக்கிறார். இதற்கு, தி.மு.க. நிர்வாகி ஆமாம் என பதில் அளிக்கிறார். எதற்கு, நாங்கள் யாகம் நடத்துகிறோம் சாமி எங்கு இருக்கு என ஆய்வு செய்ய தான் என திமிருடன் பதில் அளித்து இருக்கிறார். முதல்வர் குடும்பமே கடவுள் இருக்கா? என ஆராய்ச்சி செய்ய தான் கோவில் செல்கிறார்கள் என ஆணவத்துடன் பேசி இருக்கிறார். மேலும் விவரங்களுக்கு அதன் லிங்க் இதோ.
ஹிந்துக்களின் உணர்வுகளை தி.மு.க.வை சேர்ந்த தலைவர்கள் எப்போது எல்லாம் இழிவுப்படுத்துகின்றனரோ, அச்சமயங்களில் எல்லாம் துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு செல்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகும். இதன் பின்னணியில், தி.மு.க. ஐ.டி.விங் உள்ளது என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் நன்கு அறிவர். இப்படிப்பட்ட சூழலில் தான், துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு செல்வது கடவுள் இருக்கா? இல்லையா? என ஆய்வு மேற்கொள்ள தான் என தி.மு.க.வின் முக்கிய புள்ளி தெரிவித்து இருப்பதன் மூலம், துர்காவின் பக்தி உண்மையானதா? அல்லது ஹிந்துக்களை ஏமாற்றி அவர்களின் ஓட்டினை அறுவடை செய்ய தானா என்ற கேள்வியை மக்கள் தற்போது முன்வைக்க துவங்கி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.