தேசியக்கொடியில் இயேசு ஆசீர்வாத வாசகம்: பா.ஜ.க. முற்றுகை… ஆசிரியர் எட்வின் கைது!

தேசியக்கொடியில் இயேசு ஆசீர்வாத வாசகம்: பா.ஜ.க. முற்றுகை… ஆசிரியர் எட்வின் கைது!

Share it if you like it

தேசியக்கொடியில் இயேசுவே ஆசீர்வதியும் என்று எழுதிய தனியார் பள்ளி ஆசிரியரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பாரத தேசத்தின் 75-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்த 75-வது சுதந்திர தின பவள விழாவை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடும்படி அழைப்பு விடுத்தார் பாரத பிரதமர் நரேந்திர மோடி. மேலும், தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் சுயவிவரப் படத்துக்கு பதிலாக, தேசியக்கொடியை வைக்கும்படி கேட்டுக் கொண்டார். அதேபோல, ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை பாரத தேசத்திலுள்ள அனைவரது வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடுமாறும் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, நாட்டு மக்களும், தேச பக்தர்களும் வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடினார்கள்.

இந்த நிலையில்தான், தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில், இயேசு ஆசிர்வாத வாசகம் எழுதி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர். ஈரோடு மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள குறிஞ்சி நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் எட்வின். 34 வயதாகும் இவர்; தாராபுரம் – உடுமலை ரோட்டிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், சுதந்திர தினத்தை ஒட்டி, தான் குடியிருக்கும் வாடகை வீட்டின் பால்கனியில் உள்ள இரும்பு தடுப்புக் கம்பியில் தேசியக்கொடியை கட்டினார். இதுவரை பிரச்னை இல்லை. ஆனால், அந்த தேசியக்கொடியில், ‘இயேசுவே இந்தியாவை ஆசீர்வதியும்’ என்று குசும்புத்தனமாக எழுதி இருந்ததுதான் விவகாரமாகி விட்டது.

எட்வின் வீட்டு பால்கனியில் கட்டப்பட்டிருந்த இந்த தேசியக்கொடி தேசபக்தர்கள் பலரையும் கொந்தளிக்கச் செய்தது. உடனே, இதுகுறித்து அப்பகுதி பா.ஜ.க.வினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த பா.ஜ.க.வினர், எட்வின் வீட்டை முற்றுகையிட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்த தாராபுரம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், ஆசிரியர் எட்வினை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், போலீஸ் ஸ்டேஷனையும் முற்றுகையிட்ட பா.ஜ.க.வினர், தேசியக்கொடியை அவமதித்த எட்வினை கைது செய்தே தீர வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து, ஆசிரியர் எட்வினை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Share it if you like it