சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆர்.எஸ்.எஸ் அகில இந்திய பொது செயலாளர் திரு தத்தாத்ரேய ஹோசபலே கலந்து கொண்டு கொடியேற்றினார்

சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆர்.எஸ்.எஸ் அகில இந்திய பொது செயலாளர் திரு தத்தாத்ரேய ஹோசபலே கலந்து கொண்டு கொடியேற்றினார்

Share it if you like it

சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆர்.எஸ்.எஸ் அகில இந்திய பொது செயலாளர் திரு தத்தாத்ரேய ஹோசபலே பங்கேற்றார்.

கடந்த மூன்று நாட்களாக அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றியதை பாராட்டினார். மேலும் பல சமூக வலைத்தளங்களில் தேசபக்தியும் , தேசிய உணர்வுகள், பற்றிய கருத்துக்கள் சிறப்பாக இடம் பெற்றதையும் குறிப்பிட்டார்.

கடந்த 15 நாட்களாக நாட்டில் உத்வேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நமது பாரத குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி அவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களைப் பற்றி பேசியதையும், மலைவாழ் மக்களின் தேச பக்தி உரைத்ததையும் குறிப்பிட்டார்.

பாரத பிரதமரின் சுதந்திர தின உரை பற்றியும் குறிப்பிட்டார்.

சுதந்திரத்திற்காக ஆயிரம் ஆண்டுகள் நாம் அந்நியர்க்கு எதிராகப் போராடியதை குறிப்பிட்டார்.

அந்நியரின் ஆக்கிரமிப்பை எதிர்த்து, பாரத நாட்டில் உள்ள எல்லா மக்களும் ஒன்று சேர்ந்து போராடி இருக்கிறார்கள்.அவர்களை இந்த நேரத்தில் நினைவு கூறுவது நாம் அனைவருக்கும் மிக்கற்ற மகிழ்ச்சி என தெரிவித்தார்.

தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் பங்கு மிகப் பெரியது என்று குறிப்பிட்டார்.

முத்துராமலிங்க தேவர், கவிஞர் பாரதியார், சத்தியமூர்த்தி, நமது வீரத்தாய் குயிலி, வீர மங்கை வேலு நாச்சியார் ஆகியோரின் பங்கு மிகப் பெரியது. இவை அனைத்தும் தமிழர்கள் ஆகிய நாம் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என பேசினார்.

பால கங்காதர திலகர், காந்தி, வீரசாவர்கர், அரவிந்தர் போன்ற வீரர்களின் உத்வேகத்தினால் , தமிழகத்தில் இருந்து பல பேர் சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்றனர்.

நமது பாரத நாடு உலக நாடுகளுக்கெல்லாம் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.

நம் முன்னோர்களின் தியாகங்களைப் பற்றியும், போராட்டங்கள் பற்றியும் நாம் அடுத்து வரும் இளைய சமுதாயத்திற்கு அவசியம் கற்றுக் கொடுக்க வேண்டும்

பாரதம் உலகத்துக்கு கொடுக்கக் கூடிய கொடைகள் அதிகம்.

யோகா
மூலம் உலகத்திற்கே வழிகாட்டியாக திகழ்கிறது

மேலும் தொழில் நுட்பம், ஆயுர்வேதம், சமஸ்கிருதம், நமது குடும்ப அமைப்பு முறை, கலை, கலாச்சாரங்கள் இவைகளும், உலகத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்

இசை, கலை, இலக்கியம் இவற்றையும் எடுத்து செல்ல வேண்டிய பங்கு உள்ளது. தமிழர்கள் இந்த மூன்றிலும் விற்பன்னர்கள்.

வேற்றுமையில் ஒற்றுமை என கூறுகி றார்கள். வேற்றுமையில் பிரிவு என்பது கிடையாது .

நமது நாட்டில், ஜனநாயகம் சிறப்பாக இருக்குறது.

பல மொழிகள், பல சாதிகள், சமயங்கள் இனங்களைக் கடந்து ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே, நமது பாரதம் பல துறைகளில் வளர்ச்சி பெற்று உலகத்தில் தலைசிறந்த நாடாக திகழும்.

ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே கலாச்சாரம் எனும் உறுதியுடன் இந்த நாளை கொண்டாடுவோம்.


Share it if you like it