தேசியக்கொடி ஏற்ற மறுப்பு: ‘கிறிஸ்தவ’ தலைமை ஆசிரியை அடம்!

தேசியக்கொடி ஏற்ற மறுப்பு: ‘கிறிஸ்தவ’ தலைமை ஆசிரியை அடம்!

Share it if you like it

கிறிஸ்தவ பாதிரியார் சொன்னதை மெய்ப்பிக்கும் வகையில், தர்மபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் ஒருவர், பாரத தேசத்தின் தேசியக்கொடியை ஏற்ற முடியாது என்று மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கிறிஸ்தவர்களை பொறுத்தவரை, இயேசுவைத் தவிர வேறு யாரையும் ஆராதிப்பதும் இல்லை, மகிமைப்படுத்துவதும் இல்லை என்று சொல்வதுண்டு. இதை கிறிஸ்தவ பாதிரியார்கள் பலரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மெய்ப்பித்திருக்கிறார்கள். உதாரணமாக, கன்னியாகுமரியைச் சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, பூமித்தாய் மீது செருப்பு போட்டு நடப்பதற்கு ஒரு அறுவெறுப்பான காரணத்தைக் கூறியதோடு, பாரத மாதாவையும் அவதூறாகப் பேசியது குறிப்பிடத்தக்கது. அதேபோல, பாதிரியார் ஆப்ரஹாம் டேவிட் ஜான் என்பவர் பேசிய காணொளி ஒன்று சமீபத்தில் வெளியானது. அந்த காணொளியில், நாம் எந்த தேசத்தில் வசிக்கிறோமோ அந்த தேசத்தின் சுதந்திர தினத்தைக் கொண்டாடலாம். ஆனால், அதை மகிமைப் படுத்தக் கூடாது. அதேபோல, அந்நாட்டின் தேசியக்கொடியை வணங்குவதில் தவறில்லை. ஆனால், அதை ஆராதிக்கக் கூடாது என்று கூறியிருந்தார். இவ்வாறு அவர் கூறியதை மெய்ப்பிக்கும் வகையில், தர்மபுரியில் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ளது பேடரஹள்ளி அரசு உயர்நிலைப் பள்ளி. இப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருப்பவர் தமிழ்ச்செல்வி. இப்பள்ளியில் 282 மாணவர்கள் படித்து வரும் நிலையில், 12 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தலைமை ஆசிரியை தமிழச்செல்வி, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், தமிழக அரசின் ஓய்வுபெறும் அறிவிப்பு காலநீட்டிப்பால், நிகழாண்டு ஓய்வுபெறவிருக்கிறார். இவர்தான் தேசியக்கொடியை ஏற்ற மறுத்து, பரபரப்பை கிளப்பி இருக்கிறார். அதாவது, 75-வது சுதந்திர தின விழாவை அமிர்தப் பெருவிழாவாக கொண்டாடும்படி பாரத பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து, நாடு முழுவதுமுள்ள தேசபக்தர்கள் வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடி மகிழ்ந்தனர்.

அந்த வகையில், பேடரஹள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியிலும் சுதந்திர தினவிழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நிகழாண்டு 75-வது சுதந்திர தினம் என்பதால், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்தான் கொடியேற்ற வேண்டும் என்று கல்வித்துறை சார்பில் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி, தேசியக்கொடியை ஏற்ற மறுத்து விட்டார். பின்னர், அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் முருகன் தேசியக்கொடியை ஏற்றினார். இதனால், பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, “நான் யாகோபாவின்  சாட்சி என்கிற கிறிஸ்தவ அமைப்பின் ஒரு பகுதியைச் சேர்ந்தவர். நாங்கள் எங்களின் கடவுளை மட்டுமே வணங்குவோம். எங்களது வணக்கமும் எங்கள் தெய்வத்திற்கு மட்டுமே. தேசியக்கொடிக்கு மரியாதை தருகிறோம், அவமதிக்கவில்லை. இப்பள்ளியில் கடந்த 4 ஆண்டுகளாக பணிபுரிகிறேன். இந்த 4 ஆண்டுகளுமே நான் தேசியக்கொடியை ஏற்றியதில்லை. பள்ளியிலுள்ள மற்ற ஆசிரியர்கள்தான் தேசியக்கொடி ஏற்றினார்கள்” என்று தெனாவெட்டாக பதில் கூறியிருக்கிறார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து விட்டுத்தான் தேசபக்தர்கள் குமுறி வருகின்றனர். தேசியக்கொடியை அவமதித்த தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்விக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும். தேசியக்கொடியை ஏற்றாமல் அவமதிப்பது என்பது இந்த நாட்டையே அவமதிப்பதாகும். ஒரு அரசு ஊழியராக இருந்தும் தேசியக்கொடியை ஏற்ற மறுத்த தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்விக்கு, அரசு சலுகைகள் எதையும் வழங்கக் கூடாது என்று கொந்தளித்து வருகிறார்கள். மேலும், தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி, ஹிந்து மதத்தின் இட ஒதுக்கீட்டில் அரசு பதவி வாங்கிவிட்டு, பின்னர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி இருந்தால், அவரது பதவியை ரத்து செய்து, அவருக்கு இத்தனை ஆண்டுகளாக வழங்கப்பட்ட சம்பளம் மற்றும் சலுகைகள் அனைத்தையும் திருப்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள்.


Share it if you like it