திரெளபதியை விமர்சிக்கும் போலி சமூகநீதி போராளிகள்!

திரெளபதியை விமர்சிக்கும் போலி சமூகநீதி போராளிகள்!

Share it if you like it

பழங்குடியின ஜனாதிபதி வேட்பாளரை திருமா மற்றும் ஆ.ராசா விமர்சனம் செய்து வரும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 17 கட்சிகள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை கண்டுபிடித்து களத்தில் இறக்கி இருக்கிறது. அவர்தான் யஷ்வந்த் சின்கா. இவரும், பா.ஜ.க.வை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், பா.ஜ.க.வின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பவர் திரௌபதி முர்மு. இவர், பழங்குடி இனத்தை சேர்ந்தவர். இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக அச்சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்மணி நாட்டின் மிக உயரிய பொறுப்பினை அலங்கரிக்க இருக்கிறார். இதற்கு, நாடு முழுவதும் திரெளபதிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

அந்தவகையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் செல்வி மாயாவதி, பா.ஜ.க.வின் வேட்பாளர் என்பதையும் தாண்டி ஒரு பழங்குடியினத்தை சேர்ந்தவர் என்ற முறையில் தனது ஆதரவு கரத்தினை நீட்டி இருக்கிறார். இதுதவிர, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தனது முழு ஆதரவினை திரெளபதிக்கு வழங்குவதாக கூறியிருக்கிறார். இப்படியாக, பா.ஜ.க கூட்டணியில் இல்லாத தலைவர்கள் கூட முர்முவை ஆதரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான், பட்டியல் சமூகத்தின் தலைவராக தம்மை காட்டிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் அக்கட்சியை சேர்ந்த தலைவர்கள் பா.ஜ.க வேட்பாளர் என்ற ஒரே காரணத்திற்காக திரெளபதி முர்மை விமர்சனம் செய்து வருகின்றனர். அதேபோல, தி.மு.க மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா பா.ஜ.க.வின் ஜனாதிபதி வேட்பாளரை மிக கடுமையாக விமர்சனம் செய்து பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கொள்கை வேறுபாடு, சித்தாந்தம் வேறுபாடு மற்றும் ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும் ஒரு பழங்குடியின பெண்மணிக்கு தாமாக முன்வந்து தனது ஆதரவு கரத்தினை திருமாவளவன் மற்றும் ஆ. ராசா போன்றவர்கள் வழங்கி இருக்க வேண்டும். இதற்கு மாறாக, திரெளபதியை விமர்சனம் செய்வதன் மூலம் இவர்களின் உண்மையான சுயரூபம் தற்பொழுது அம்பலமாகி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it