ஆ.ராசாவை தொடர்ந்து ஸ்டாலினை கோர்த்து விட்ட தி.மு.க. நிர்வாகி!

ஆ.ராசாவை தொடர்ந்து ஸ்டாலினை கோர்த்து விட்ட தி.மு.க. நிர்வாகி!

Share it if you like it

தனிநாடு கோரிக்கையை மீண்டும் வலியுறுத்திய தி.மு.க. நிர்வாகிக்கு பொதுமக்கள் உட்பட சமூக ஆர்வலர்கள் வரை பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. ஸ்டாலின், முதல்வராக ஆனபின்பு மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கினை கடைப்பிடித்து வருகிறது. இதுதவிர, மத்திய அரசை ஒன்றிய அரசு எனவும் தனிநாடு கோரிக்கை குறித்தான கோஷம் தமிழகத்தில் தொடர்ந்து ஒலித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், தி.மு.க. துணை பொதுச்செயலாளரும் நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா. அண்மையில், நாமக்கல் மாநாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது; தனித் தமிழ்நாடு கேட்டார் பெரியார். ஆனால், பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட தி.மு.க அதில் இருந்து விலகி ஜனநாயகத்துக்காக, இந்திய ஒருமைப்பாட்டுக்காக, இந்தியா வாழ்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். பிரதமருக்கும், அமித்ஷாவுக்கும் சொல்லிக் கொள்கிறேன்; அண்ணா வழியில் செல்லும் எங்களை பெரியார் வழியில் செல்ல வைத்து விடாதீர்கள். ’தனிநாடு கேட்க வைத்து விடாதீர்கள்’ என்று பேசி இருந்தார்.

இதனை தொடர்ந்து, ஆதன் ஊடக நெறியாளர் மாதேஷ். முகில் என்பவரை அண்மையில் பேட்டி கண்டு இருக்கிறார். அப்போது, முகிலின் பேச்சு முழுக்க முழுக்க இந்தியாவிற்கு எதிராகவும், பிரிவினையைத் தூண்டும் வகையில் அமைந்து இருந்தது. பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசிய முகிலனை நெறியாளர் கண்டிக்காமல், அவரை பேச விட்டு வேடிக்கை பார்த்த சம்பவத்திற்கு பலர் தங்களது கடும் கோவத்தை ஆதன் ஊடகத்திற்கு தெரிவித்து இருந்தனர்.

இப்படிப்பட்ட சூழலில், பிரபல ஊடகமான தந்தி டிவி நடத்திய நேர்காணலில் தி.மு.க. மூத்த தலைவர் கண்ணதாசன் கலந்து கொண்டார். அப்போது, பேசிய அவர் திராவிட நாடு கோரிக்கையை நாங்கள் விட்டு விடவில்லை என்றைக்குமே அது இருக்கிறது. அது, திராவிட நாடாக இருக்கலாம், தனி தமிழ்நாடாக இருக்கலாம். என, மீண்டும் பிரிவினையை தூண்டும் வகையில் பேசி இருக்கிறார். இதுதான், தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. மூத்த தலைவர்கள் தொடர்ந்து பிரிவினையை தூண்டும் வகையில் பேசி வருகின்றனர். அந்த வகையில், விடியல் ஆட்சியை மத்திய அரசு ஏன்? கலைக்க கூடாது என சமூக ஆர்வலர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it