முதல்வர் துறையை அவமதித்த அமைச்சர்!

முதல்வர் துறையை அவமதித்த அமைச்சர்!

Share it if you like it

தமிழக முதல்வர் ஸ்டாலின் வசம் உள்ள காவல்துறையை அமைச்சர் ஐ.பெரியசாமி இழிவுப்படுத்தி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் மகளுமான கனிமொழியின் தீவிர ஆதரவாளராக இருப்பவர் சவுக்கு சங்கர். இவர், தமிழக முதல்வர் ஸ்டாலின், பாரதப் பிரதமர் மோடி, மத்திய, மாநில அமைச்சர்கள் மாற்று கட்சியில் உள்ள பெண்கள், என அனைவரையும் மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்ய கூடியவர். அந்தவகையில், தமிழக காவல்துறை பற்றியும், காவல் துறை உயர் அதிகாரி பற்றியும் மிகவும் கண்ணிய குறைவான வகையில் தொடர்ந்து பேசி வருகிறார். கனிமொழியின் ஆதரவாளர் என்பதால் இவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகிறது. இதுதவிர, காவல்துறையை அவமதிக்கும் சவுக்கு சங்கர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக இருந்து வருகிறது.

அதேபோல, தி.மு.க கூட்டணியில் உள்ள வி.சி.க கட்சியின் மூத்த தலைவர் வன்னியரசு, விடுதலைச்சிறுத்தைகள் கொடி எங்கெங்கெங்கு ஏற்றப்படுகிறதோ, அதை கண்டறிந்து தடுப்பதற்கு தமிழ்நாடு காவல்துறையில் தனி அணி எதுவும் போடப்பட்டுள்ளதா? இதே வேலையாய் திரிகிறார்கள். விடுதலைச்சிறுத்தைகளின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறைக்கு அண்மையில் பகீர் எச்சரிக்கையை விடுத்து இருந்தார்.

இதையடுத்து, தி.மு.க.வை சேர்ந்த கழக கண்மணிகள் காவல்துறையினரை அவமதிக்கும் சம்பவங்களும் இன்றுவரை தொடர்கதையாக இருந்து வருகிறது. இப்படிபட்ட சூழலில் தான், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை விமர்சனம் செய்வதாக கருதிக் கொண்டு காவல்துறை அதிகாரிகளாக இருப்பவர்கள் உண்மையைப் பேசமாட்டார்கள் என ஒட்டு மொத்த தமிழக காவல்துறையையும் இழிவுப்படுத்தியுள்ளார். தற்பொழுது இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தி.மு.க ஆட்சியில் காவல்துறையினருக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வரும் இவ்வேளையில் தமிழக அமைச்சர் ஒருவரே காவல்துறையினர் உண்மையை பேசமாட்டார்கள் என அவமதிக்கும் வகையில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன் லிங்க் இதோ.


Share it if you like it