நெஞ்சுக்கு நீதி: இதுதான் சார் தீட்டு!

நெஞ்சுக்கு நீதி: இதுதான் சார் தீட்டு!

Share it if you like it

நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் வரும் வசனத்தை மேற்கோள் காட்டி தி.மு.க செய்த தவறுகளை சுட்டிக்காட்டும் விதமாக இக்காணொளி அமைந்துள்ளது. இது தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தி.மு.க.வின் மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் (13-5-2020) அன்று தலைமை செயலாளரை சந்தித்து மனுக்களை வழங்கினார். இதையடுத்து, பத்திரிக்கையாளர்களை சந்தித்த பொழுது இவ்வாறு கூறினார். “எங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினர். நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா தாழ்த்தப்பட்ட ஆட்களா?” என்று கூறி இருந்தார். இவரின், கருத்து பட்டியல் சமூக மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவது போல் அமைந்து இருந்தது.

இதையடுத்து, பொது தொகுதிக்கு நீங்கள் ஆசைப்படாதீர்கள் என தி.மு.க (மறைந்த) தலைவர் கலைஞர் கூறியது எங்களை அவமதித்தது போல் இருந்ததாக வி.சி.க மூத்த தலைவரும் துணை பொதுச் செயலாளருமான வன்னியரசு வேதனையுடன் தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தன்னை சந்திக்க வந்த முதியவரிடம் நீங்கள் கெளடாவா என ஸ்டாலின் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல, ஜாதி சான்றிதழ் கேட்டு ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தீ குளிக்க முயன்றது. நரிக்குறவர் வீட்டில் சாப்பிட சென்று விட்டு பாதியிலேயே முதல்வர் எழுந்து ஒடியது இதுதான் சார் தீட்டு என தி.மு.க செய்த தவறுகளை இக்காணொளி தோலுரித்து காட்டியுள்ளது.

அதன் லிங்க் இதோ.


Share it if you like it