மதுவை விற்று 44 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டிய திமுக  அரசு !

மதுவை விற்று 44 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டிய திமுக அரசு !

Share it if you like it

திருப்பூரில் என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஈரோட்டில் உள்ள அந்தியூரில் பாஜக மாநில.தலைவர் அண்ணாமலை ஒரு கூட்டத்தில் பேசியுள்ளார். அதில் திமுக ஆட்சியின் போது 2006 முதல் 2011 வரை திமுகவில் இருந்த 11 அமைச்சர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட 35 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறினார். ஊழல் வழக்கில் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அரசு ஊதியம் சென்று கொண்டிருப்பதாக கூறினார். இந்தியாவில் எந்த அரசும் தானாக மதுவை விற்று வருமானம் ஈட்டுவது கிடையாது. ஆனால் தமிழ்நாட்டில் மதுவை விற்று அரசுக்கு வந்த வருமானம் மட்டும் 44 ஆயிரம் கோடி. இந்த மாவட்டத்தில் மட்டும் உள்ள 95782 விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் மூலம் அவர்களது வங்கி கணக்கில் 6000 ரூபாய் செலுத்தப்பட்டிருப்பதாகவும், முத்ரா திட்டத்தின் மூலம் 4683 கோடி கடன்கள் வழங்கி உள்ளதாகவும் கூறினார்.

மேலும் அந்தியூரில் விளையும் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டுமென்ற மக்களின் நீண்டநாள் கோரிக்கையை பாஜக நிறைவேற்றும் என்றும், மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மஞ்சள் வாரிய அமைப்பை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

source :polimer


Share it if you like it