தமிழகத்தில் விடியல் ஆட்சியை போன்றே அரசு பேருந்துக்களின் நிலையும் நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே செல்கிறது என்பது யாரும் மறுக்க முடியாது உண்மை. சமீபத்தில் சிவகங்கை சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் முன்பக்க இடது சக்கரம் தனியாக கழன்று ஓடிய சி.சி.டி.வி காட்சியை அண்மையில் பாலிமர் தொலைக்காட்சி ஒளிபரப்பி இருந்தது.
மாரநாடு பகுதியிலிருந்து மதுரை சோக்கி சென்ற நகர்ப்பேருந்து, திருப்புவனம் சந்தை திடல் பேருந்து நிலையம் அருகில் வரும் போது இடது பக்கம் உள்ள முன் சக்கரம் திடீரென்று தனியாக கழன்று ஓடி, முன்னால் நின்றுக் கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விழுந்தது. ஓட்டுனர் உடனடியாக பேருந்தை நிறுத்தியதால் மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
தமிழக போக்குவரத்துறை அமைச்சராக உள்ள ராஜ கண்ணப்பன் அவர்கள் மோசமான நிலையில் இயங்கி கொண்டு இருக்கும் அரசு பேருந்துகளை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புகளை வழங்குவதற்காக தனியார் நிறுவனத்திடம் ஆர்டர் செய்து இருந்தார். இதில் மிகப்பெரிய தவறு நடந்து உள்ளது என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் நாட்டு மக்களுக்கு சுட்டி காட்டி இருந்தார்.
இந்நிலையில் பிரபல அரசியல் விமர்சகர் செல்வ குமார் அவர்கள் 5 மாதங்களாக டயர் வாங்க நேரமில்லை ஆனால் ஸ்வீட் பாக்ஸ் வாங்க ரூ100 கோடி கம்பெனியிடம் டென்டர் விட நேரம் இருக்கிறதா என்று தமிழக அரசிற்கு அண்மையில் கேள்வி எழுப்பி இருந்தார்.