தமிழக பா.ஜ.க தலைவரிடம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்.
நாங்க ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம், என்று தமிழக மக்களுக்கு தேர்தல் வாக்குறுதி கொடுத்தது திமு.க அரசு. ஆளும் கட்சியாக ஆன பின்பு நீட் தேர்வை ரத்து செய்ய முடியாமல் இன்று வரை திணறி வருவதை தமிழக மக்கள் நன்கு அறிவர். அதனை தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய உங்கள் உதவி தேவை என தமிழக முதல்வர் ஸ்டாலின். கேளரம், ஆந்திரம், உள்ளிட 12 மாநில முதல்வர்களுக்கு அண்மையில் கடிதம் எழுதி இருந்தார்.
நீட் தேர்வை ரத்து செய்ய உங்கள் உதவி வேண்டும் என பா.ஜ.க முன்னாள் தலைவர் எல்.முருகன் அவர்களிடம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பகீரங்க கோரிக்கை விடுத்திருந்தார். அதே போன்று கொரோனா தடுப்பூசியை மத்திய அரசிடம் இருந்து அதிக அளவில் வாங்கி தர பா.ஜ.க உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், மத்திய அரசிடம் இருந்து ரூ.5000 வாங்கி கொடுத்தால், மழை வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு கொடுப்போம் என தற்பொழுதைய பா.ஜ.க தலைவர் அண்ணாமலையிடம் அமைச்சர் கோரிக்கை வைத்து இருப்பதற்கு நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.