‘மன்னிப்பு கேட்க முடியாது போடா’… தி.மு.க.வுக்கு பா.ஜ.க. பதிலடி ‘டி சர்ட்’!

‘மன்னிப்பு கேட்க முடியாது போடா’… தி.மு.க.வுக்கு பா.ஜ.க. பதிலடி ‘டி சர்ட்’!

Share it if you like it

அண்ணாமலைக்கு ஆதரவாக ‘மன்னிப்பு கேட்க முடியாது போடா’ என்கிற வாசகங்களுடன் கூடிய ‘டி சர்ட்’ அணிந்து பா.ஜ.க.வினர் சமூக வலைதளங்களில் போட்டோ பதிவிட்டு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

கடந்த 2020-ம் ஆண்டு ஒரு தனியார் வார இதழுக்கு பேட்டியளித்த இயக்குனர் வெற்றிமாறன், 2011-ம் ஆண்டு தான் டெல்லி சென்றிருந்தபோது, ஹிந்தி தெரியாததால் விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறியிருந்தார். இதையடுத்து, தமிழ் திரையுலகினர் ஹிந்தி தெரியாது போடா என்று டி சர்ட் அணிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். அதேபோல, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பார்லிமென்ட் அலுவல் மொழி கமிட்டியின் 37-வது கூட்டம் நடந்து. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஹிந்தி மொழியை உள்ளுர் மொழிக்கு மாற்றாக அல்லாமல், ஆங்கில மொழிக்கு மாற்றாக பயன்படுத்தலாம் என்று கூறியிருந்தார். அப்போது, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ஹிந்தி தெரியாது போடா என்று டி சர்ச் அணிந்தும், தமிழ்த் தாயின் ஓவியத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டும் ட்ரெண்டாக்கினர்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் தி.மு.க. முக்கிய புள்ளிகளின் சொத்துப் பட்டியலை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14-ம் தேதி வெளியிட்டார். இதற்கு தி.மு.க.வினர் மத்தியில் கடும் சலசலப்பு கிளம்பிய நிலையில், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அமைச்சர் உதயநிதி ஆகியோர் இழப்பீடு கேட்டு அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினர். மேலும், அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் 500 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடர்வோம் என்றும் மிரட்டி இருந்தனர். இதையடுத்து, வக்கீல் மூலம் அண்ணாமலை பதில் நோட்டீஸ் அனுப்பினார். அதில், “தி.மு.க.வினர் சொத்து குறித்து வெளியிட்ட செய்தி உண்மை. தி.மு.க.வினர் மீதான புகார், பொதுத் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. இதில், மன்னிப்பு கேட்க மாட்டேன். இழப்பீடும் வழங்க முடியாது. வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க தயார்” என்று தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, அண்ணாமலையின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பா.ஜ.க.வினர் மற்றும் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் மன்னிப்பு கேட்க முடியாது போடா என்கிற வாசகம் அச்சிட்ட டி சர்ட் அணிந்து சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். இதுதான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.


Share it if you like it