திமுகவால் ஆங்கில வழி கல்வி திணிக்கப்பட்டு மம்மி டாடி கலாச்சாரம் பரவியது – இந்து முன்னணி குற்றச்சாட்டு !

திமுகவால் ஆங்கில வழி கல்வி திணிக்கப்பட்டு மம்மி டாடி கலாச்சாரம் பரவியது – இந்து முன்னணி குற்றச்சாட்டு !

Share it if you like it

திமுக ஆட்சியில் தமிழுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் குற்றம்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த மூன்று ஆண்டுகளாக பள்ளி இறுதி தேர்வு, +1, +2 பொது தேர்வில் தமிழ் பாட தேர்வில் பல்லாயிரம் பேர் கலந்து கொள்ளவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கும் செய்தி. அதிலும் தாய் மொழியான தமிழ் மொழி தேர்வு எழுத மாணவர்கள் தயக்கம் காட்டுவது பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. திமுக ஆட்சியில் அரசு கட்டிடங்களில் மட்டுமே தமிழ் வாழ்க என்ற பதாகை மின்னொளியில் பளிச்சிடுகிறது. தமிழர்கள் வீட்டிலும் மூளையிலும் ஆங்கிலம் திணிக்கப்பட்டு, தமிழ் குப்பை தொட்டியில் வீசப்படும் அவலத்தை காண்கிறோம். திமுக தலைவரான ஸ்டாலின் அவர்கள் சென்னை மேயராக இருந்த போது தான் மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி திணிக்கப்பட்டு மம்மி டாடி கலாச்சாரம் பரவலாக்கப்பட்டது.

திமுக ஆட்சியில் தான் அதிகமான கிறித்துவ சிறுபான்மையினர், பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கி மக்கள் வரிப்பணத்தை வாரி வழங்கி கல்வி என்ற பெயரில் இளம் வயதினரிடையே இந்து மத வெறுப்பு கிறித்துவ மத விசுவாசம் திணித்திட அரசின் கதவுகள் விசாலமாக திறக்கப்பட்டது. தமிழ் படிக்காமல் பள்ளி படிப்பை முடிக்க அனுமதியில்லை என்று சிறுபான்மையினர் பள்ளிகளில் தமிழ் சிறப்பு பாடமாக மூன்றாவது மொழியாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ் மொழி சிறப்பு பாட தேர்வில் இதுவரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடந்ததால் தமிழ் படிக்காமலேயே பள்ளிப்படிப்பை முடிக்கும் வேடிக்கை தமிழ் வளர்த்ததாக நாடகம் நடத்தும் திமுக ஆட்சியில் நடக்கிறது. இந்தாண்டு கூட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில் குளறுபடி ஏற்பட்டுள்ளது என்றால், தமிழ் மொழிக் கல்வி எந்த நிலையில் உள்ளது என்பதை தமிழர்கள் உணர வேண்டும். இந்தாண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சுமார் 15 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை. நேற்று நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 17,633 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளவில்லை என செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. இவ்வளவு மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது உண்மையா? அல்லது சத்துணவு முட்டையில் பொய் கணக்கு எழுதியது போல மாணவர்கள் சேர்க்கை என்பது போலியானதா? அதிலும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகளில் தான் அதிகமான மாணவர்கள் வரவில்லை என தெரிகிறது.

மாணவர்கள் எண்ணிக்கையை அதிகமாக காட்டி அதற்குரிய சலுகைகளை, ஆசிரியர் சம்பளங்கள் களவாடப்படுகிறதா என்பதை தேசிய புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும். மேலும் திமுகவின் குடும்பத்தினர் நடத்தும் எந்த தொலைக்காட்சியிலும் தமிழ் சம்பந்தமான நிகழ்ச்சிகள் இடம் பெறுவதில்லை. காரணம் தமிழை அழிப்பதில் தானே தி.மு.கழகத்தின் குறிக்கோளாக இருக்கிறது. ஆக, திமுக ஆட்சியிலும் அவர்கள் குடும்பத்தார் நடத்தும் தொலைக்காட்சியிலும் தமிழுக்கு எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை. தமிழில் திமுகவின் புனையப்பட்ட வரலாறும் திமுக அடிவருடிகளை குஷிப்படுத்த அவர்களின் கேவலமான பாடல்களை பாடங்களாகத் திணித்து தமிழை அழித்து வருகிறது திமுக. பள்ளி ஆரம்ப வகுப்புகளில் தமிழ் வழி கல்வி, தமிழ் மொழி கல்விக்கு முக்கியத்துவம் தரும் தேசிய கல்விக் கொள்கையை, நவோதயா பள்ளிகளை நடைமுறை படுத்த திமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பள்ளி கல்வியை முழுமையாக இலவசமாக தருவதை திமுக விரும்பவில்லை. எனவே தமிழை, தமிழக மாணவர்களின் உரிமைகளை நிலைநாட்ட, பள்ளிகளில் நடக்கும் முறைகேடுகளை களைய வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிமை தோற்கடித்து தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.


Share it if you like it