பேனா நினைவுச்சின்னம்… மக்களின் உண்மை நிலை இதுதான்!

பேனா நினைவுச்சின்னம்… மக்களின் உண்மை நிலை இதுதான்!

Share it if you like it

கருணாநிதியின் நினைவாக பேனா நினைவுச்சின்னம் அமைப்பது தேவையில்லாதது என்பதுதான் மக்களின் உண்மையான கருத்தாக இருக்கிறது என்பது பொதுமக்களிடம் நேரடியாக நடத்திய கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்திருக்கிறது.

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு, சென்னை மெரினா கடலுக்குள் பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று, அவரது மகனும், தி.மு.க. தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். இதற்காக, தமிழக அரசு சார்பில் 81 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். எனினும், இது மத்திய அரசின் கடலோர மண்டல ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வருவதால், அந்த ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டது. அதற்கு, பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தி கருத்தை பதிவு செய்யுமாறு அந்த ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 31-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆட்களை அழைத்து வந்திருந்தனர் தி.மு.க.வினர். காரணம், மாஸ் காட்டி காரியத்தை சாதித்து விடலாம் என்று தப்புக் கணக்குப் போட்டனர். ஆனால், நடந்ததோ வேறு. பா.ஜ.க., பூவுலகின் நண்பர்கள், மே 7 உட்பட பல்வேறு தரப்பினரும் கடலுக்குள் பேனா நினைவுச்சின்னம் வேண்டாம் என்றே கருத்துத் தெரிவித்தனர். அதேசமயம், பேனா நினைவுச்சின்னத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேசியவர்களை எல்லாம் பேசவிடாமல் கூச்சல் போட்டும், மைக்கை ஆஃப் செய்தும் தடுத்தனர் தி.மு.க.வினர்.

இந்த பரபரப்பான சூழலில் மேடை ஏறிய, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், உங்களை மெரினா கடற்கரையில புதைக்க விட்டதே தப்பு, இதுல பேனா நினைவுச் சின்னம் கேட்குதோ… நீ வைத்தால் நான் உடைப்பேன் என்று கெத்து காட்டிவிட்டுச் சென்றார். இதனால், தி.மு.க.வினரின் திட்டம் நிறைவேறவில்லை. இது தி.மு.க.வினரை உசுப்பேற்றவே, சமூக வலைத்தளங்களில் சீமானுக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அதேசமயம், சீமானுக்கு ஆதரவாக பொதுமக்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்தான், பேனா நினைவுச் சின்னம் தேவையா இல்லையா என்பது குறித்து பொதுமக்களிடம் நேரடியாகவே கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. இக்கருத்துக் கணிப்பில் பெரும்பாலன மக்கள் பேனா நினைவுச்சின்னம் வேண்டாம் என்றே கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பான பல்வேறு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவற்றில சில இதோ உங்களுக்காக….


Share it if you like it