கருணாநிதி பேனா சிலைக்கு பின்னால் இப்படியொரு திட்டமா…? பகீர் கிளப்பும் பத்திரிகையாளர் பாண்டியன்!

கருணாநிதி பேனா சிலைக்கு பின்னால் இப்படியொரு திட்டமா…? பகீர் கிளப்பும் பத்திரிகையாளர் பாண்டியன்!

Share it if you like it

கருணாநிதிக்கு மெரீனா பீச்சில் சமாதி வைத்தது எப்படி? தற்போது பேனா நினைவுச்சின்னம் எதனால் அமைக்கப்படுகிறது என்பது குறித்த புதிய தகவலை அம்பலப்படுத்தி இருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் பாண்டியன்.

இதுகுறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “கருணாநிதி உயிரிழந்தபோது, அவருக்கு மெரீனாவில் சமாதி அமைக்க, அப்போதைய முதல்வர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசிடம் தி.மு.க. அனுமதி கேட்டது. ஆனால், எடப்பாடியாரோ மெரீனாவில் வைக்க அனுமதிக்க முடியாது. வேண்டுமானால் கிண்டியில் வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். உடனே இரவோடு இரவாக சென்னை உயர்நீதிமன்றத்தின் கதவை தட்டியது தி.மு.க. தலைமை. நள்ளிரவு 12 மணிக்கு கோர்ட் கூடியது.

தலைமை நீதிபதியாக இருந்த குழுவாடி ரமேஷ் நிலை பேசப்பட்டார். விளைவு, மெரீனாவில் யாருக்கும் சமாதி வைக்கக் கூடாது என்று டிராபிக் ராமசாமி, பா.ம.க. வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்டோர் தொடுத்திருந்த வழக்குகள் போலி கையெழுத்திட்டு வாபஸ் பெறப்பட்டன. இதையடுத்து, மெரீனாவில் சமாதி வைக்க அனுமதி அளித்தார் தலைமை நீதிபதி குழுவாடி ரமேஷ். இதன் பிறகு, குழுவாடி ரமேஷ் என்ன ஆனார் என்பதே தெரியவில்லை. இதன் பிறகே, கருணாநிதிக்கு அங்கு சமாதி கட்டப்பட்டது.

ஆனாலும், தி.மு.க. கட்சிக்காரர்களைத் தவிர வேறு யாரும் கருணாநிதி சமாதியை சீண்டுவதுகூடக் கிடையாது. எம்.ஜி.ஆர். சமாதியையும், ஜெயலலிதா சமாதியையும் மட்டுமே பொதுமக்கள் பார்த்துச் செல்கிறார்கள். காரணம், கருணாநிதி செய்தது அனைத்துமே துரோகம். ஆகவே, துரோகத்தின் சின்னமாகவே பார்க்கப்படுகிறார். எனவே, கருணாநிதி பற்றி மக்கள் பேச வேண்டுமென்றால் ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயம். இதன் வெளிப்பாடுதான் கருணாநிதி பேனாவுக்கு கடலுக்குள் சிலை வைக்கும் திட்டம்” என்று உண்மையை அம்பலப்படுத்தி இருக்கிறார்.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it