ஒரு மணி நேரம் லேட்டா..? பத்திரிகையாளர் மீது பாய்ந்த  அமைச்சர்!

ஒரு மணி நேரம் லேட்டா..? பத்திரிகையாளர் மீது பாய்ந்த அமைச்சர்!

Share it if you like it

தி.மு.க. ஆட்சியில் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து மிரட்டப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், மற்றொரு அமைச்சர் தற்பொழுது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

தி.மு.க. தலைவர் மற்றும் தமிழக முதல்வராக இருப்பவர் ஸ்டாலின். தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே என்பதற்கு ஏற்ப தி.மு.க. அமைச்சர்களின் செயல்பாடுகள் இன்று வரை இருந்து வருகின்றன. அந்த வகையில், பத்திரிகையாளர்களை மிரட்டுவதும், ஒருமையில் பேசுவதை வாடிக்கையாக அமைச்சர்கள் கொண்டு இருக்கின்றனர்.

இதனிடையே,, உர தட்டுப்பாடு இருப்பதாகவும் பக்கத்து மாவட்டத்திற்கு சென்று வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கடலூர் விவசாயிகள் கூறிவருகிறார்களே இதுகுறித்து உங்கள் கருத்து என்னவென்று வேளாண் துறை அமைச்சர் பன்னீர் செல்வத்திடம் அண்மையில் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

நீ உரம் வாங்கிறியா எந்த விவசாயி சொல்றான் நீ சொல்லுயா? என அந்த நிருபரை பார்த்து அமைச்சர் திட்டி இருந்தார். அமைச்சரின், இந்த திமீர் பேச்சை இதுவரை எந்த ஒரு பத்திரிகையாளர் சங்கங்களும் கண்டிக்கவில்லை. குறிப்பாக, குரல் அற்றவர்களின் குரலாக ஒலிப்பேன் என்று பேசி வரும் நெறியாளர் செந்தில் கூட இது குறித்து பேசவில்லை என்பதே நிதர்சனம்.

இந்த நிலையில், இளைஞர் மேம்பாட்டு திறன் நிகழ்ச்சி சிவகங்கையில் நேற்று நடந்தது. இதில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், அமைச்சர் மிகவும் காலதாமதாக வந்தார். இதுகுறித்து, நியூஸ் 18 தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதனால், ஆத்திரமடைந்த அமைச்சர் பெரிய கருப்பன், செய்தி வெளியிட்ட நியூஸ் 18 நிருபர் சிதம்பரத்தை ஒருமையில் திட்டியதோடு மிரட்டவும் செய்தார். இந்த காணொளிதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Share it if you like it