தமிழக போலீசார் சிறை: லஞ்சம் கேட்டதாக ராஜஸ்தான் காவல்துறை புகார்?

தமிழக போலீசார் சிறை: லஞ்சம் கேட்டதாக ராஜஸ்தான் காவல்துறை புகார்?

Share it if you like it

தமிழகத்தை சேர்ந்த காவலர்கள் 12 பேரை ராஜஸ்தான் காவலர்கள் சிறைபிடித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில், தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் கொலை, கொள்ளை, திருட்டு, என சட்டம் ஒழுங்கு சிரிப்பாய் சிரித்து வருகிறது. இதனை, மெய்ப்பிக்கும் வகையில், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து விடியல் அரசை குற்றம் சாட்டி வருகின்றனர். இப்படியாக, தமிழக காவல்துறையின் நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் தான், தமிழக காவல்துறையினர் ராஜஸ்தான் மாநிலத்தில் சிக்கி கொண்ட அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதாவது, திருட்டு வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க தமிழகத்தை சேர்ந்த 12 பேர் கொண்ட காவலர் குழு ஒன்று ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்று இருக்கிறது. இதையடுத்து, அக்குழு குற்றவாளிகளை தேடிபிடித்து தமிழகம் அழைத்து வர முயன்று இருக்கிறது.

இந்த நிலையில், குற்றவாளிகளை விடுவிக்க வேண்டுமென்றால் தங்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என தமிழக காவல்துறையினர் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.

இதையடுத்து, ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று இருக்கின்றனர். இதனை தொடர்ந்து, தமிழகத்தை சேர்ந்த 12 காவலர்களையும் ராஜஸ்தான் காவல்துறையினர் சிறைபிடித்துள்ளனர்.

புகாரின் உண்மையைத்தன்மை குறித்து விசாரிக்க திருச்சி தனிப்படை போலீசாரை நாங்கள் கைது செய்துள்ளோம் என ராஜஸ்தான் போலீசார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it