திமுக அமைச்சர் துரைமுருகனின் இந்திய ஒருமைப்பாடு பேச்சு – பின் இருக்கும் அரசியல் கள நிலவரம்?

திமுக அமைச்சர் துரைமுருகனின் இந்திய ஒருமைப்பாடு பேச்சு – பின் இருக்கும் அரசியல் கள நிலவரம்?

Share it if you like it

பல ஆண்டுகளாக தமிழகத்தில் மறந்து போயிருந்த காவிரி நதிநீர் பங்கீடு சிக்கல் மீண்டும் தமிழக கர்நாடக மாநிலங்களில் அரசியலாகிறது. அணைகளில் நீர்வரத்து இல்லை போர்த்திய நீர் கையிருப்பு இல்லை அதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக காங்கிரஸ் அரசு முரண்டு பிடிக்கிறது. எங்களுக்கு உரிய நீரை கொடுத்தே தீர வேண்டும் என்று தமிழகம் கச்சை கட்டுகிறது. இரண்டிற்கும் இடையில் இரு மாநிலங்களிலும் இருக்கும் பிரிவினைவாதிகளும் இன மொழிவாதிகளும் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தின் நீர்வளத் துறை அமைச்சரும் திமுகவின் பொதுச் செயலாளருமான துரைமுருகன் தமிழ்நாடு ஏதோ தனி நாடு போல நடந்து கொள்ளக் கூடாது நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வோடு பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்று பேசி இருக்கிறார்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி இன்னும் ஒரு படி மேலே போய் காவிரி நதிநீர் விவகாரத்தை முன்வைத்து தமிழக அரசுக்கும் கர்நாடக மாநில அரசுக்கும் இடையில் பிரிவினையை ஒன்றிய பாஜக அரசு முன்னெடுப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார். வழக்கமான இந்த ஒன்றியம் என்ற வார்த்தையை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தான் அதிக அளவில் பயன்படுத்தும். ஆனால் சமீபகாலமாக தமிழக காங்கிரஸாரும் அதிக அளவில் இந்த ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறது. ஒருவேளை கூட்டணி கட்சியாக இருக்கும் காங்கிரஸ் அதன் தமிழக தலைவரே ஒன்றையும் இந்த வார்த்தையை பயன்படுத்தி பிரிவினையை வளர்க்கும் விதமாக பேசியதை தான் தோழமை சுட்டுதலாக துரைமுருகன் சுட்டிக்காட்டி தனிநாடு போல செயல்படக்கூடாது இந்தியர்கள் என்ற உணர்வோடு செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கி இருப்பாரோ ? என்ற சந்தேகம் வருகிறது.

இந்த நதிநீர் பங்கிட்டை முன்வைத்து காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் மத்திய பாஜக அரசு ஆணையத்தின் மீதும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் முன்வைத்து வருகிறது. இதன் மூலம் காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடகாவிடம் கேட்டு பெறுவதற்கு தமிழகத்தின் ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. அல்லது கர்நாடக காங்கிரஸிடம் பேசி மாநிலத்தின் உரிமையை மீட்கும் அளவில் திமுக காங்கிரஸ் கூட்டணி சுமூகமாக இல்லை. இரண்டும் இல்லாத பட்சத்தில் தேசிய காங்கிரஸ் கர்நாடக மாநில காங்கிரஸ் இரண்டிலும் தமிழகத்தின் நிலையை எடுத்துரைத்து அதற்கு உரிய நதிநீர் பங்கீடு வாங்கும் அளவில் வலிமையாக திமுக கட்சியும் தமிழக அரசோ இல்லை என்பது தெளிவாகிறது.

சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் ஒரு மாநாட்டிற்கு முழு அனுமதியும் பாதுகாப்பும் வழங்கி சிறப்பு அழைப்பாளர்களாக தங்களின் அமைச்சர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் அனுப்பி விழாவை முன்னெடுத்தவர்கள். அந்த விழாவில் உதயநிதியின் பேச்சுக்கு கண்டனமோ எதிர்ப்போ தெரிவிக்காமல் அதை ஆமோதிக்கும் வகையில் பூசி மடிப்பு பேசிப் போனவர் இதே துரைமுருகன். ஆனால் இன்று அவரே முன்வந்து இந்தியர் என்று ஒற்றுமை பாடம் எடுப்பது ஆச்சரியமான விஷயம். தான். கடந்த காலங்களில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் எல்லாம் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ருடோவை அவரின் வேளாண் திருத்த சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டத்தை வெளிப்படையாக ஆதரித்த நிகழ்விற்காக அவரைஇ நாயக பிம்பமாக கொண்டாடியது.

இவ்வளவு விவகாரங்களுக்கு இடையில் தனி நாடு போல குறுகிய மனப்பான்மையில் செயல்படாதீர்கள். நாம் அனைவரும் இந்தியர்கள் .அந்த ஒற்றுமை உணர்வோடு பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள் என்று திமுகவின் துரைமுருகன் பேசுவது அதன் பின்னிருக்கும் திமுகவின் பதட்டமும் திமுகவின் அரை நூற்றாண்டு காலம் பிரிவினை வரலாறை அறிந்தவர்களுக்கு தெளிவாக புரியும். ஆனால் ஒருபுறம் இந்து எதிர்ப்பு இந்திய எதிர்ப்பு பேசிக்கொண்டே தேசத்திற்கும் தேச இறையாண்மைக்கும் நலம் தரும் கூடிய விஷயங்களை எதிர்ப்பது இவற்றிற்கெல்லாம் ஊறு விளைவிக்கும் விஷயங்கள் அமைப்புகள் அவற்றின் செயல்பாடுகளை ஆதரிப்பது என்று செயல்பாடுகள் அனைத்தையும் தேசத்திற்கு எதிராக இருப்பது . மறுபுறம் ஒருமைப்பாடு இந்தியர் என்று பேசுவது நகைப்புக்குரியது.

அரசியலில் மாற்றம் ஒன்றே மாறாதது என்ற தத்துவத்தின் அடிப்படையில் ஒரு வேளை திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு தான் இந்தியன் என்ற உணர்வு வந்திருந்தால் அவர் இந்திய ஒருமைப்பாட்டு உணர்வு கொண்டவராக மாறி இருந்தால் அது வரவேற்கத்தக்கது தான். ஆனால் அவர் அந்த ஒருமைப்பாட்டையும் இந்திய உணர்வையும் முதலில் அவரது கட்சி அவர்களின் செயல்பாடுகள் அவர்களின் கருத்தியலில் இருந்தே முதலில் தொடங்க வேண்டும் . அதுவே சரியாக இருக்கும். வார்த்தைக்கு வார்த்தை ஒன்றிய அரசு தொட்டதற்கெல்லாம் தமிழ்நாடு தனி நாடாக மாறுவது ஒன்றே தீர்வு என்ற முழக்கம் அத்தனை பிரிவினைவாத அமைப்புகள் பயங்கரவாதிகளோடும் ஆதரவு மனநிலை என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டு இந்தியன் என்ற ஒருமைப்பாட்டு உபதேசத்தை மேற்கொண்டால் அது நகைப்புக்குரியது.

திமுகவினரும் அவர்கள் ஆதரவாளர்களும் தான்இல்லாத ஒற்றுமை உணர்வும் ஒருமைப்பாட்டு உணர்வும் மற்றவர்களுக்குள்ளும் இருக்கக் கூடாது வரக்கூடாது என்ற வலுக்கட்டாயமான தனிநாடு என்ற கருத்து திணிப்பை தான் திமுகவினர் திரும்பிய பக்கமெல்லாம் முன்னெடுக்கிறார்கள். அதன் கூட்டணி கட்சிகளும் மேடைதோறும் தனித்தமிழ் தமிழ்நாடு என்றே முழங்கி வருகிறார்கள். ஆனால் இந்தியன் என்ற உணர்வோடும் ஒருமைப்பாட்டு வரையறையோடும் வாழ்பவர்களை காவிகள் சங்கீகள் மோடியின் பக்தர்கள் பாசிச பயங்கரவாதிகள் ஆரிய வந்தேறிகள் பார்ப்பன கைக்கூலிகள் என்று இகழ்வதையே முழு நேர தொழிலாக கொண்டிருக்கிறார்கள். ஒரு புறம் இந்தியன் என்ற உணர்வோடும் ஒருமைப்பாட்டோடும் வாழும் மக்களை மனதளவில் துன்புறுத்துவது. அவர்களையும் அவர்களின் உணர்வுகளையும் புண்படுத்துவது. அவமதிப்பது ஒன்றையே அராஜகமான அரசியலாக முன்னெடுப்பது. மறுபுறம் வந்து பொதுவெளியில் இந்தியன் என்ற உணர்வோடு இருங்கள் என்று ஒற்றுமை பாடம் நடத்துவதெல்லாம் திமுகவின் இரட்டை நிலைப்பாட்டிற்கு மட்டுமே சாத்தியம். அவர்களின் வரலாறும் வாழ்க்கையும் எல்லா விஷயத்திலும் அப்படித்தான் இருக்கும். அது அவர்களின் அரை நூற்றாண்டு கால தேச விரோத பிரிவினை ஆதரவு அரசியலை ஆராய்ந்து பார்த்தால் சந்தேகத்திற்கு இடமின்றி சாட்சியங்களோடு புரிந்து கொள்ள முடியும்.

சமீபத்தில் காவிரி நதி நீர் விவகாரம் சம்பந்தமாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது அதற்கும் மேலாக தமிழக அரசு அதன் அதிகாரத்தைக் கடந்து என்ன செய்து விட முடியும்? அதனால் கூடுமானவரையில் சட்டப் போராட்டம் நடத்தி தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்க தமிழக அரசு தன்னாலான எல்லா முயற்சிகளையும் முன்னெடுக்கும் என்று பேசி இருந்தார் .ஆனால் திமுகவின் பேச்சாளரான கான்ஸ்டான்டைன் ரவீந்திரன் என்பவர் காவிரி நதிநீரை பெறுவதற்கு திமுக தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்யும் . ஆனால் நதிநீர் கிடைக்காத பட்சத்தில் தமிழ்நாடு தனி நாடாக மாறுவது ஒன்றே தீர்வு . தனித் தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கியே நகர்வோம் என்று ஒரு ஊடக விவாதம் வழியாக பேசி இருந்தார் .ஆனால் இன்று அதே திமுகவின் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர் நாம் எல்லோரும் இந்தியர் என்ற உணர்வோடு இருங்கள். தனிநாடு போல செயல்படாதீர்கள் என்று அறிவுரை கூறுகிறார். இதில் யாருடைய நிலைப்பாட்டை கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்று பின்பற்றுவது ? என்ற குழப்பம் இந்நேரம் அவர்களின் கட்சிக்காரர்களுக்கு வந்திருக்கும்.


Share it if you like it