மாணவிகள் மத்தியில் சர்ச்சை கருத்து: தி.மு.க எம்.எல்.ஏ.வுக்கு குவியும் கண்டனம்!

மாணவிகள் மத்தியில் சர்ச்சை கருத்து: தி.மு.க எம்.எல்.ஏ.வுக்கு குவியும் கண்டனம்!

Share it if you like it

பெண்கள் அழகாக இருந்தால் தான் கூடுதல் சம்பளம் கிடைக்கும் என தி.மு.க எம்.எல்.ஏ மாணவிகள் முன்பு பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க ஆட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர். குறிப்பாக, விடியல் ஆட்சியில் பெண் காவலர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் ஒருபுறம் என்றால் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, சுப.வீரபாண்டியன் மற்றும் சுந்தவரவள்ளி போன்றவர்களின் கருத்துக்கள் மூலம் இளைய தலைமுறைகளின் எதிர்காலமே தற்பொழுது பெரும் கேள்விக்குறியாக மாறி வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில் தான், திண்டுக்கல்லில் பள்ளி கல்வித்துறை சார்பில் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட தி.மு.க எம்.எல்.ஏ காந்திராஜன் கூறியதாவது;

இப்போதுள்ள மல்டிநேசனல் கம்பெனிகளில் வேலைவாய்ப்பு கொடுப்பது எப்படியென்றால், நீங்கள் வாங்கியிருக்கும் மதிப்பெண்ணை பெரும்பாலும் பார்ப்பதில்லை. உங்களின் கல்வித்தகுதி, எந்த துறையில் ஆர்வம், என்ன செய்திருக்கிறீர்கள் என்பதை பார்த்தாலும், பிரதானமாக உங்களிடம் எதிர்பார்ப்பது ஆங்கில புலமையைத்தான். சரளமாக ஆங்கிலத்தில் பேசும் திறமை இருந்தால் தான் மட்டுமே அதிகமான சம்பளம் கிடைக்கும். பெண்களாக இருந்தால் அழகாக இருக்க வேண்டும் என்று கம்பெனிகாரர்கள் நினைக்கிறார்கள். அவர்களுக்கு கூடுதல் சம்பளமும் கொடுக்கிறார்கள் என்று பேசி இருக்கிறார்.

Image

Share it if you like it