பஞ்சமி நிலம் அபகரிப்பு:தி.மு.க. எம்.பி. மீது புகார்… ரஞ்சித்தை தேடும் நெட்டிசன்கள்!

பஞ்சமி நிலம் அபகரிப்பு:தி.மு.க. எம்.பி. மீது புகார்… ரஞ்சித்தை தேடும் நெட்டிசன்கள்!

Share it if you like it

பஞ்சமி நிலத்தை தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் அபகரித்து விட்டதாக வி.சி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி இருப்பது கூட்டணி கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்பு பட்டா நிலத்தில் கொட்டா அமைப்பதையே தனது கொள்கையாக கொண்டு இருக்கின்றனர். அதனை மெய்ப்பிக்கும் வகையில், பல்வேறு சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் இருந்து வருகிறது.

அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம் நம்மியந்தல் கிராமத்தை சேர்ந்தவரும், தி.மு.க. ஒன்றிய துணை செயலாளருமாக இருப்பவர் கருணாநிதி. இவர், வடபுழுதியூர் கிராமத்தை சேர்ந்த 30 பேரின் நிலங்களை போலி பட்டா மூலம் தனது பெயருக்கு மாற்றி மிகப்பெரிய மோசடியை அண்மையில் அரங்கேற்றி இருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க. எம்.பி. மீது பகீர் குற்றச்சாட்டு தற்போது சுமத்தப்பட்டு இருக்கிறது. அதாவது, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ்எடையாளம் பகுதியில் தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் புதிய கல்லூரி ஒன்றினை கட்டி வருகிறார். தனது கல்லூரிக்கு தேவையான இடங்களை பட்டியல் சமூக மக்களிடம் இருந்து அவர் அபகரித்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வி.சி.க.வை சேர்ந்த மயிலம் சட்டமன்ற தொகுதி செயலாளர் செல்வ சீமான் 50-க்கும் மேற்பட்டவர்களுடன் சென்று கல்லூரி வளாகத்தில் ரகளையில் ஈடுபட்டு இருக்கிறார். இதையடுத்து, வி.சி.க. மற்றும் தி.மு.க.விற்கும் இடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டு இருக்கிறது.

இதையடுத்து, நேரடியாக களத்திற்கு வந்த மயிலம் காவல்துறையினர் வி.சி.க.வை சேர்ந்தவர்களை அப்புறப்படுத்தி உள்ளனர். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த வி.சி.க. நிர்வாகி விழுப்புரம் முழுவதும் தி.மு.க.வை மிக கடுமையாக விமர்சனம் செய்து போஸ்டர் ஒட்டி இருக்கிறார். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்தான செய்தியினை பிரபல ஊடகமான நீயூஸ் தமிழ் செய்தி வெளியிட்டு உள்ளது. அதன் லிங்க் இதோ.

Image

சோழ மன்னர் ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தில் தான் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலம் அபகரிப்பு செய்யப்பட்டது. ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் தான் இருண்ட காலம் என தஞ்சாவூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் உண்மைக்கு புறம்பான வகையில் பேசி இருந்தார்.

அண்ணா அறிவாலயம், முரசொலி அலுவலகம் போன்றவை பஞ்சமி நிலத்தில் அமைந்து இருப்பதாக மிகப்பெரிய குற்றச்சாட்டு இன்று வரை இருந்து வருகிறது. இதனிடையே, தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் மீது பட்டியல் சமூக மக்களின் நிலங்களை அபகரித்து கொண்டதாக மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. ராஜராஜ சோழனுக்கு குரல் கொடுத்த பா. ரஞ்சித் விடியல் அரசை கண்டித்து எப்போது குரல் கொடுப்பார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it