வாட்ச் பில் கேட்டதுக்கே செந்தில்பாலாஜிக்கு இந்த நிலைமைன்னா… கோர்ட்டுக்கு வந்தா அவ்வளவுதான்..!

வாட்ச் பில் கேட்டதுக்கே செந்தில்பாலாஜிக்கு இந்த நிலைமைன்னா… கோர்ட்டுக்கு வந்தா அவ்வளவுதான்..!

Share it if you like it

அண்ணாமலையிடம் வாட்ச் பில் கேட்டதுக்கே செந்தில்பாலாஜிக்கு இந்த நிலைமைனா, அவர் கோர்ட்டுக்கு வந்தா அவ்வளவுதான் என்று டி.ஆர்.பாலுவுக்கு பா.ஜ.க. நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

தி.மு.க. அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தார் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. இதனால், அவரை சீண்டும் வகையில், அவர் கட்டியிருக்கும் ரபேல் வாட்ச்சுக்கு பில் இருக்கிறதா என்று செந்தில்பாலாஜி கேட்டார். இதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 14-ம் தேதி வாட்ச் பில்லை வெளியிட்ட அண்ணாமலை, தி.மு.க. தலைவர்களின் சொத்துப் பட்டியலையும் சேர்த்து வெளியிட்டார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தி.மு.க. நிர்வாகிகள் பலரும் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

குறிப்பாக, முதல்வர் ஸ்டாலின், எம்.பி.க்கள் கனிமொழி மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடர்ந்த அவதூறு வழக்கு இரு தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது. ஜூலை 14-ம் தேதி அண்ணாமலை நேரில் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். இந்த வழக்கில் ஆதாரங்களுடன் நேரில் ஆஜராகப் போவதாக அண்ணாமலையும் தெரிவித்திருக்கிறார். இதனிடையே, அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், பா.ஜ.க.வின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் வடசென்னை புதுவண்ணாரப்பேட்டை – திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நடந்தது. இக்கூட்டத்தில், அமர்பிரசாத் ரெட்டி, குஷ்பு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய அமர்பிரசாத் ரெட்டி, “பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு ஒரு வழக்குத் தொடுத்திருக்கிறார். இதுகுறித்து வக்கீலிடம் பேசியபோது, தலைவரெல்லாம் வரவேண்டாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார்கள். இருந்தாலும், தலைவரிடம் போன் செய்து கேட்டேன். அதற்கு, நான் நீதிமன்றத்திற்கு நேரடியாக வந்து சந்திக்கிறேன் என்றார்.

வாட்ச் பில் கேட்டதுக்கே செந்தில்பாலாஜிக்கு இந்த நிலைமைனா, தலைவர் கோர்ட்டுக்கெல்லாம் வந்தா டி.ஆர்.பாலு நிலைமைமை யோசித்துப் பாருங்க. அடுத்த  லிஸ்ட்டில் இருப்பது டி.ஆர்.பாலுதான். இவரும் அடுத்து சிறை செல்வார். செந்தில்பாலாஜி அ.தி.மு.க.வில் இருக்கும்போது, அவரை ஊழல்வாதி, கடத்தல்காரன், கொலைகாரன் என்று பேசிய தற்போதைய முதல்வர் ஸ்டாலின், தான் பேசியதை எல்லாம் மறந்துவிட்டாரா” என்று கேள்வி எழுப்பினார்.


Share it if you like it