திராவிட மாடல் என்பது ஒரு இத்துப்போன, தீய்ந்துபோன மாடல். இந்த விஷயத்தில் கவர்னரின் கருத்தை நான் ஏற்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருக்கிறார்.
அயோத்திதாச பண்டிதர் நினைவுதினத்தை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அயோத்திதாச பண்டிதர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘‘தமிழகத்திற்கென்று தனிப்பட்ட முறையில் எந்த பெருமையும் இருக்கக் கூடாது என்பதன் அடிப்படையில், வரலாற்று போராளிகளின் பெயர்களை மறைத்து இந்த திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து தமிழர்களின் பெருமையும் தனிச் சிறப்பும், திராவிட ஆட்சியாளர்களால் மறைக்கப்பட்டு வருகிறது.
சமாதி கட்டுவது, பேனா வைப்பது, பள்ளிக் கூடங்களை சீரமைக்க மக்களிடம் கையேந்துவது இதுதான் திராவிட மாடல். திராவிட மாடல் ஒரு இத்துப்போன, தீய்ந்துபோன மாடல்தான். இந்த விஷயத்தில் கவர்னர் சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஸ்டாலினைவிட சிறப்பாக ஆட்சி செய்யும் முதல்வர்கள் எல்லாம் இருக்கிறார்கள். வீட்டில் தெலுங்கு பேசுபவர் தமிழர், தமிழ் பேசும் நாங்கள் திராவிடர்களா… இந்தியாவுக்கு யார் வந்தாலும் இந்தியராகி விடுகிறார்கள். எந்த திராவிடர் வந்தாலும் தமிழராகி விடுவார்கள். தமிழர்கள் அனைவரும் திராவிடர்களாகிட வேண்டும். இதையெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்வது?’’ என்று சொல்லி தி.மு.க.வை பங்கம் செய்திருக்கிறார்.