பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது… செந்தில்பாலாஜி கைதுக்கு பழிக்குப் பழியா..?!

பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது… செந்தில்பாலாஜி கைதுக்கு பழிக்குப் பழியா..?!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டிருக்கிறார். அமைச்சர் செந்தில்பாலாஜி கைதுக்கு பழிக்குப் பழியாக கைது செய்யப்பட்டாரா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

தமிழக பா.ஜ.க. செயலாளராக இருக்கும் எஸ்.ஜி சூர்யா, மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் மிகவும் நெருக்கமாக இருப்பவர். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக செயல்படும் இவர், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குறித்து தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குறித்து ஒரு பதிவை வெளியிட்டிருந்தார் எஸ்.ஜி.சூர்யா.

அப்பதிவில், “புரச்சீ போராளி, விளம்பர அரசியல் பிரியர் மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு வணக்கம்! மதுரை பெண்ணாடம் பேரூராட்சி 12-வது வார்டு உறுப்பினர் விசுவநாதனை, மலம் கலந்த நீரில் இறங்கி கட்டாயப்படுத்தி வேலை செய்ய சொன்னதன் காரணமாக, உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சட்டப்படி குற்றம் எனத் தெரிந்தும் அந்த பாவப்பட்ட தூய்மை பணியாளரை அந்த கழிவுநீர் கால்வாயில் இறங்கி வேலை செய்ய சொன்னது உங்கள் சக தோழர், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் விசுவநாதன்தான்.

இறந்தவர் பட்டியலின சகோதரர். எங்கே உங்கள் செங்கொடி? எங்கே உங்கள் போராட்ட குணம்? எங்கே உங்கள் உணர்ச்சி மிகுந்த வார்த்தைகள்? ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக என்றால் உடனே முந்திக் கொண்டு வருவீர்கள். இப்பொழுது எங்கே சென்று விட்டீர்கள்? பதுங்கி விட்டீர்களா? அல்ல பம்மி விட்டீர்களா? ஏன் உங்களது செங்கொடி உங்கள் சக தோழர்களுக்கு எதிராக ஏறாதா? அல்லது உங்கள் செங்கொடி பட்டியலின சமுதாயதய சகோதரர்களுக்கு ஆதரவாக வீதியில் இறங்கி போராடாதா? பிரிவினைவாதம் பேசி சிவப்பு கொடியை போர்த்திக் கொண்டு அரசியல் செய்யும் உங்கள் போலி அரசியல், அந்த மலக்குழியை விட மோசமாக துர்நாற்றம் வீசுகிறது. மனிதனாக வாழ வழி தேடுங்கள் தோழரே!” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இப்புகாரின் அடிப்படையில், சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்த எஸ்.ஜி.சூர்யாவை நேற்று நள்ளிரவு காக்கி உடை அணியாமல் வந்த மதுரை போலீஸார் கைது செய்து, மதுரைக்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள். இதையறிந்த அவரது ஆதரவாளர்களும், பா.ஜ.க.வினரும் சென்னை எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியே திரண்டு, எதற்காக சூர்யாவை கைது செய்தீர்கள்? யார் அவரை கைது செய்தார்கள் என்று கேள்வி எழுப்பினர். மேலும், சூர்யா கைதை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வீடியோ குறித்துதான் பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா பதிவு வெளியிட்டிருந்தார்.


Share it if you like it