திமுக செய்திதொடர்பாளரின் ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திமுக.வின் செய்திதொடர்பாளர் திருமதி.சல்மா தனது ட்விட்டர் கணக்கில் போதைபொருள் பயன்படுத்திய வழக்கில் கைதாகி சிறையிலுள்ள சல்மான் கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஆதரவாக பதிவு செய்துள்ளார். மேலும் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி மூத்த தலைவர் மெஹபூமா முஃப்தி கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆதரவு தெரிவிக்கும் விதமாக பேசியுள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த வழக்கில் சிறையிலுள்ள ஆர்யன் கானிற்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் குரல் கொடுத்துள்ளார், திமுக.வின் செய்தி தொடர்பாளர் சல்மா. இது தமிழக ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மேலும் இவர் தற்போது கைதானவர் செய்த தவறை சுட்டிக்காட்டாமல் அவரது சமூகத்தை சார்ந்தவர் என்பதால் ஆதரவு ட்வீட், இது எந்தவிதத்தில் நியாயம்? என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
