ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த பிடாரிசேரியில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையை திறந்து வைக்க பரமக்குடி திமுக எம்எல்ஏ முருகேசனை வரவேற்க அந்த பகுதியில் ஸ்பீக்கர் வைத்து கொண்டு திமுக கொள்கை பாடல்களை போட்டு எம்எல்ஏவை வரவேற்க ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் குடிகாரர் ஒருவர் திமுகவின் கொள்கை பாடலுக்கு வைப் ஆகி போதை தலைக்கேறி நடு ரோட்டிலே கால் மேல் கால் போட்டு ஸ்பீக்கரில் திமுக பாட்டை கேட்டுக்கொண்டு செவ்வாய் கிரகத்துக்கு செல்வது போல் படுத்து கொண்டிருந்தார். இதனால் அந்த பகுதியில் வந்த பேருந்துகள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். அங்குள்ள மக்கள் எழுப்பியும் எழாமல் அங்கேயே படுத்து கொண்டிருந்தார்.
இதனை அடுத்து காவல்துறை அங்கு வந்து குடிகாரரை சாலையிலிருந்து அப்புறப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அந்த குடிகாரர் திமுக நகர செயலாளரிடம் வேலை பார்க்கும் நபர் என்று அவரே கூறியுள்ளார்.
https://x.com/polimernews/status/1768809484615663678?s=20