‘நீ போடா காஷ்மீருக்கு, நாங்களே தீவிரவாதியை அனுப்புறோம். அவன் உன்னை சுட்டுக் கொல்லட்டும்’ என்று கவர்னருக்கு கொலை மிரட்டல் தி.மு.க. ஆபாச பேச்சாளர் மீது கவர்னர் மாளிகை தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 9-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. ஆனால், தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு கொடுத்த உரையில், சர்ச்சைக்குரிய வார்த்தைகளை படிக்காமல் தவிர்த்து விட்டார் கவர்னர் ஆர்.என்.ரவி. இது தி.மு.க.வினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்திய நிலையில், கவர்னருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் ஸ்டாலின். இது சட்டமன்ற மரபை மீறிய செயல் என்பதால், அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார் கவர்னர். இதன் மூலம் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. அமைச்சர்களை அசிங்கப்படுத்தி விட்டார் கவர்னர். இதை தி.மு.க.வினரால் ஜீரணிக்க முடியவில்லை. எனினும், கவர்னரை ஓடச்செய்து விட்டதாகக் கூறி, தற்பெருமை பேசி வருகிறார்கள்.
அதேசமயம், தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நடந்து கொண்ட விதம், அவை மரபுகளுக்கு முரணானது என்பது சட்ட வல்லுனர்கள் மூலம் தெரியவந்தது. இதை வைத்தே ஆட்சியைக் கலைக்க முடியும் என்கிற தகவலும் சொல்லப்பட்டிருக்கிறது. இது தி.மு.க. தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 10 ஆண்டுகள் இலவு காத்த கிளியாக காத்திருந்து பிடித்த ஆட்சி பறிபோய்விடுமோ என்கிற பயத்தில், மறுநாளே கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டிய ஸ்டாலின், கவர்னருக்கு எதிராக யாரும் சட்டமன்றத்தில் பேசக்கூடாது என்று உத்தரவிட்டார். மேலும், கட்சி நிர்வாகிகளுக்கும் ஒரு கட்டளையைப் போட்டார். அதாவது, கவர்னருக்கு எதிராக யாரும் போஸ்டர் அடித்து ஒட்டக் கூடாது. கவர்னரை விமர்சித்து மேடைகளில் பேசக்கூடாது என்றும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்தார்.
எனினும், தி.மு.க. பேச்சாளர்கள் அடங்கவில்லை. அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ரெட் லைட் புகழ் ஆர்.எஸ்.பாரதி, கவர்னரை அவன் இவன் என்று ஏகவசனத்தில் விமர்சித்து பேசினார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க.வினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தி.மு.க. பேச்சாளர் ஒருவர், கவர்னரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு, பயங்கரவாதிகளை ஏவி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. பேச்சாளர்களில் ஒருவரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார், கவர்னரை திட்டக் கூடாது என்று. அந்த மயிரான்டி நீ கொடுத்த பேப்பரை ஒழுங்கா படிச்சிருந்தான்னா, நா அவன் கால்ல பூப்போட்டு கையெடுத்து கும்பிட்டு அனுப்பி இருப்பேன். எங்க முப்பாட்டன் டாக்டர் அம்பேத்கர் பெயரை சொல்ல மாட்டேன்னு சொன்னான்னா, அவனை செருப்பால அடிப்பேன்னு சொல்ற உரிமை எனக்கு இருக்கா இல்லையா? அவரு பேர சொல்ல மாட்டேன்னா, நீ போடா காஷ்மீருக்கு. நாங்களே பயங்கரவாதியை அனுப்பி வைக்கிறோம். அவன் உன்னை சுட்டுக் கொல்லட்டும் லவட…பால்” என்று அச்சல் ஏற்ற முடியாத வார்த்தைகளை பிரயோகம் செய்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார்.
இது மட்டுமல்ல, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை ங்…தா என்றும், ங்….மால என்றும் ஆபாச வார்த்தைகளால் பேசியதோடு, எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியையும் தடித்த வார்த்தைகளால் திட்டினார். இதில், ஹைலைட் என்னவென்றால், தி.மு.க. தலைவர்களுக்கு மட்டுமே ஆண்மை இருப்பதாகவும், அதனால்தான் அவர்களுக்கு குழந்தை இருப்பதாகவும், ஆகவே, வாரிசு அரசியல் செய்வதாகவும் கூறியதுதான் செம காமெடி. இதை வைத்து, அண்ணாதுரைக்கு ஏன் குழந்தை இல்லை, ஈரோடு ராமசாமிக்கு ஏன் குழந்தை இல்லை என்று கேள்வி எழுப்பி நெட்டிசன்கள் கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, கவர்னரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு, பயங்கரவாதியை ஏவிவிட்டு கொலை செய்வததாகவும் மிரட்டிய தி.மு.க. ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது, சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார் அனுப்பி இருக்கிறார் கவர்னர் மாளிகையின் துணைச் செயலாளர் பிரசன்ன ராமசாமி. அப்புகாரில், கவர்னர் குறித்து தி.மு.க. பேச்சாளர் தகாத வார்த்தைகளால் பேசியிருக்கிறார். அவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் மீது இந்தியன் பீனல் கோடு 124 மற்றும் 1870-ன் படி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.