தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல். திணறி வருவது ஒருபுறம் என்றால். தி.மு.க அமைச்சர்கள், நிர்வாகிகள், கழக கண்மணிகளால், சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் மோசமாகி கொண்டே செல்வதாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில். தி.மு.கவை சேர்ந்த ஒரு எம்பி தற்பொழுது சிறையிலும் மற்றொரு எம்பி மீது எழுந்திருக்கும் கொலை முயற்சி வழக்கும். மக்கள் மத்தியில் கடும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தி.மு.க அரசில் சட்டம் ஒழுங்கு மோசமாகி கொண்டே செல்வதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு குறித்த அறிக்கையை நேற்றைய தினம் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு வழங்கி இருந்தார். இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று மாலை சந்திக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பதை தெரிந்த பின்பும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மீண்டும் மீண்டும் தமிழக மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபடுவது கடும் கண்டனத்திற்குறியது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.